காணாமல் போனோர் அலுவலக சட்ட மூலம் தொடர்பில்மகிந்த ஆதரவாளர்களிடம் இருந்து மைத்திரிபால சிறிசேன கருத்துக்களை கோரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத் தரப்புத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
கடந்த 17ம் திகதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெலவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். 16ம் திகதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கெஹெலிய உள்ளிட்ட மகிந்த ஆதரவாளர்கள் இந்த அலுவலகம் அரசியல் யாப்புக்கு விரோதமானது என்று தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பிலேயே குறித்த தொலைபேசி உரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டிருந்தது. இதன்அடிப்பமையில் மகிந்த தரப்பின் கருத்தை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு மைத்திரி அவர்களிடம் கூறியுள்ளார்.