புதுக்கோட்டை கம்பன் நகரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் தம்பதியினர் சொந்த வேலை காரணமாக தஞ்சை சென்று விட்டு, கார் ஒன்றில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கந்தர்வகோட்டை மெய்இடிபட்டி சாலையை கடந்தபோது கார் பாலத்தில் பயங்கரமாக மோதியது. இதில் கணவன்-மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அப்போது, விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மற்றவர்கள் சோகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், ஒருவர் இறந்துகிடந்த பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை உருவினார். கூட்டத்தில் பலர் திரண்டிருந்த நேரத்திலும், மிகவும் சிரமப்பட்டு மோதிரத்தை பறித்தது புகைப்படத்தில் தெளிவாக பதிவாகியுள்ளது.
அடுத்த புகைப்படத்தில் மோதிரமின்றி அந்த பெண் உயிரிழந்து கிடப்பதையும் காண முடிகிறது. அதுமட்டுமின்றி, மோதிரத்தை திருடிய நபர் திமுக கரை வேட்டி கட்டியிருப்பதும் புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது.
விபத்து நடந்தவுடன் உதவிக்கு ஓடிவரும் நபர்களிடையே, இப்படிப்பட்டவர்களும் இருப்பது மனிதநேயம் குறித்த கேள்வியை நம்முன் எழுப்புகிறது. இதைப் பார்க்கும்போது, இன்றைய காலத்தில் மனிதநேயம் மெல்ல செத்து வருகிறதோ என்ற கேள்வியை பலமாக எழுப்புகிறது.
நன்றி:muthupettaimedia