க.கிஷாந்தன்-
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா - தரவளை பகுதியில், 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்து, அதை கமராவில் பதிவு செய்து வைத்திருந்த 5 சிறுவர்களை அட்டன் பொலிஸார் 28.08.2016 அன்று இரவு கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சிறுவர்கள் 13 மற்றும் 14 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில், சிறுமியின் பொற்றோர்களினால் அட்டன் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைபாடு முறைப்பாட்டையடுத்தே, குறித்த சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சிறுவர்களிடமிருந்து, கமராவையும் பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி, டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.