12 வயது சிறுவனால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை..!

ந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் 12 வயது சிறுவனால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள பாஸ்னி பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 15 ஆம் திகதி அவரது வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சடலத்தினை பிரேத பரிசோதனையிற்கு உட்படுத்த அனுப்பி வைத்த பொலிஸாருக்கு தற்போது பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ள நிலையில் அந்த சிறுமியின் மர்ம மரணம் தொடர்பாக பல திடுக்கிடும் உண்மைகளும் வெளிவந்துள்ளன.

கூலி தொழிலாளிகளான குறித்த சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிடும் சூழ்நிலையில் அதே வீட்டில் தங்கியிருந்த 12 வயது சிறுவன் கடந்த 12 ஆம் திகதியில் இருந்து தொடர்ந்து 4 நாட்களாக அவளை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த சிறுமி உயிரிழந்த 15 ஆம் திகதியும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த குறித்த 12 வயதான சிறுவனை தற்போது கைது செய்துள்ள பொலிஸார், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -