இம்போட்மிரர் ஊடகவலையமைப்பின் வெளியீட்டில் மாபெரும் நூல் அறிமுக விழா -இன்று அட்டாளைச்சேனையில்

ம்போட்மிரர் ஊடகவலையமைப்பின் வெளியீட்டில் இன்று அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் உயர்தரப் பாடசலை சாலிஹா மண்டபத்தில் ஏறாவூர் பிரதேச செயலக உதவி அரசாங்க அதிபர் எஸ்.எல்.ஏ.ஹனீபா தலைமையில் கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன் எழுதிய  ”தொப்புள் கொடியும் தலைப்பாகையும் ” நூல் அறிமுகவிழா இன்று மாலை 4.00 மணிக்கு இடம்பெறவிருக்கிறது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், கெளரவ அதிதியாக முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோருடன் மாகாண சபை உறுப்பினர்கள் கலைக்கப்பட்ட மாநகரசபை, பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், கல்விமான்கள், வழக்கறிஞர்கள், கணக்கறிஞர்கள், எழுத்தாளார்கள், கலைஞர்கள், கவிஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

 உங்களையும் அன்புடன் அழைக்கிறார் நூலாசிரியர் கவிஞர் அன்புடீன் மற்றும் இம்போட்மிரர் நூல் வெளியிட்டுக்குழுவினர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -