தென் மாகாண சபையில் குழப்பம் – சபை அமர்வுகள் ஒத்திவைப்பு

தென் மாகாண சபை அமைச்சர் டீ.வி.உபுலை அப்பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிர்ப்பு வௌியிடும் வகையில் சபையின் உறுப்பினர்கள் குழுவொன்று இன்று கறுப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பை வௌியிட்டமையால் சபை அமர்வுகள் எதிர்வரும் 8ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கறுப்புப் பட்டி அணிந்து வந்தவர்கள், மாகாண சபை செயற்பாடுகளைக் குழப்பும் வகையில் செயப்பட்டதால், சபையை ஒத்திவைக்க அதன் தலைவர் சோமவங்க கோதாகொட தீர்மானித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தென் மாகாண சபையின் உறுப்பினர் டீ.வி.உபுல் வசம் இருந்த மீன் பிடி உள்ளிட்ட சில அமைச்சுக்களை எச்.டப்ளியூ. குணசேனவிடம் கையளிக்க, அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -