மூதூரில் ஹக்கீமால் கட்டப்பட்ட நீதி மன்றக்கட்டிடம் ஜனாதிபதியால் திறக்கப்படவுள்ளது

திருமலையான்-

முன்னாள் நீதியமைச்சராக இருந்த றஊப் ஹக்கீமின் 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மூதூர்மாவட்ட நீதவான் நீதி மன்றக் கட்டிடம் சிறிசேன எதிர்வரும் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதியால் திறந்துவைக்கப்படவுள்ளது.

நீதியமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி விஜயதாச ராஜபக்ஸவின் அழைப்பின் பேரில்பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.ஆர்.சாரதி துஷ்மத்த மித்ரபாலவின் பங்களிப்புடன் இலங்கை சனநாயக சோஷலிசகுடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மூதூர் மாவட்ட நீதவான் நீதி மன்றக் கட்டிடம் வைபவரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.

நிர்மாணிக்கப்பட்ட மூதூர் மாவட்ட நீதவான் நீதி மன்றக் கட்டிடமானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியதலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நீதியமைச்சராக இருந்தபோது ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில்நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மூதூர் மாவட்ட நீதவான் நீதி மன்றக் கட்டிட திறப்பு விழாவில் முக்கிய அரசியல் பிரமுகர்கள், நீதியமைச்சு உயரதிகாரிகள், நீதிபதிகள், சட்டத்தரணிகள், நீதிமன்ற பதிவாளர்கள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், அரசஉயரதிகாரிகள் என பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -