"கட்சியின் தலைமையினை ஒருபோதும் மாற்ற முடியாது" ஹரீஸ் ஆவேசம்


ஹாசிப் யாஸீன், அகமட் எஸ். முகைதீன்


கிழக்கின் எழுச்சிக் கோசம் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கு எதிரான சீசன்பிரச்சினையாகும். மக்கள் ஆணையுடன் முஸ்லிம் காங்கிரஸின் தலைமை இருக்கின்றது.போலிப் பிரச்சாரங்களினால் எமது கட்சியின் தலைமையினை ஒருபோதும் மாற்ற முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கல்முனைத் தொகுதிஅபிவிருத்திக் குழுத் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணிஎச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது பிரதேசத்திற்கான கிளைகளை புனரமைப்புச்செய்யும் வேலைத்திட்டத்தினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருதுஅமைப்பாளர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் மேற்கொண்டு வருகின்றார். அதனடிப்படையில்சாய்ந்தமருது 11ம் பிரிவுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிளையினை புனரமைப்புச்செய்யும் கூட்டம் நேற்றிரவு (17) ஞாயிற்றுக்கிழமை அமைப்பாளர் இல்லத்தில் இடம்பெற்றது.இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கவும் முஸ்லிம் காங்கிரஸினைபலவீனப்படுத்தவும் இன்று சில சீசன் வியாபாரிகள் கிழக்கின் எழுச்சி என்ற பிரதேச வாதகோரிக்கையை முன்வைத்து மக்களை குழப்ப முனைகின்றனர். இவர்களின் குறுநில இச்சையுடைய குறுகிய மனப்பான்மையுடன் மேற்கொள்ளப்படுகின்ற இந்த பொய்ப்பிரச்சாரம்மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கு எதிராக கடந்த காலங்களில் நுஆ கட்சியின் தலைவர்முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரஃப், தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முன்னாள்அமைச்சர் அதாவுல்லா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர்றிசாட் பதியுதீன் ஆகியோரால் சீசனுக்கு சீசன் விடுக்கப்பட்ட சவால்களை எமது கட்சி மக்கள்ஆணையுடன் அவைகளை தோற்கடித்துள்ளது என்பதை இந்த கிழக்கின் எழுச்சிகொந்துராத்துக்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் யாப்பினை கொண்டமைந்த ஒரு கட்சியாகும். முஸ்லிம் உம்மா என்ற அடிப்படையில் இந்த சமூகம்ஒன்றிணைய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கட்சி உருவாக்கப்பட்டது. அந்தவகையில் மறைந்த பெரும் தலைவர் அஷ்ரஃப் சில வசியத்துக்களை சொல்லி இருக்கின்றார்.மேடை மேடையாக முதலாவதாக அவர் சொன்ன விடயம் பிரதேச வாதங்கள்கழைந்தெறியப்பட வேண்டும் என்பதாகும். எனவே ஒரு தேசிய ரீதியான கட்சியின்தலைமைக்கு பிரதேச வாத வரம்புகளை போட விளைவது முட்டாள் தனமானதாகும்.

பொதுபல சேனா போன்ற சிங்கள தீவிரவாத குழுக்களின் அழுத்தம் அரசுக்கு உள்ள இந்தக்காலப்பகுதியில் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை மிக முக்கியமானதாக காணப்படுகின்றது.

இவ்வாறான காலகட்டத்தில் கட்சியில் சம்பந்தமில்லாத, கட்சியோடு எந்தவித உத்தியோகபூர்வ தொடர்பும் அற்ற சிலர் கட்சிக்கு வெளியே இருந்து கொண்டு முஸ்லிம் காங்கிரஸ்கிழக்கு மாகாணத்துக்குரிய ஒரு கட்சி, கிழக்கான் ஆழ வேண்டும், கிழக்கின் எழுச்சி என்றகோசத்தை சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் சுவர் ஒட்டிகள் மூலமாகவும் முன்னெடுத்துசமூக ஒற்றுமையை சீர்குலைக்க முயல்வதை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவர் என்ற வகையிலும் முஸ்லிம் சமூகத்தின் மக்கள் பிரிதிநிதி என்ற வகையிலும்மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம்சமூகத்தின் தலைமைத்துவத்திற்கு மிகவும் பொருத்தமுடையவர். அவரிடம் இருக்கின்றதலைமைத்துவ பண்பு, பக்குவம் மிக்க செயற்பாடு, ஆற்றல் என்பவற்றின் காரணமாக இந்தசமூகத்தை அவர் தொடர்ந்தும் வழிநடத்த வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்துகொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால் கிழக்கு வடக்கு என்பதற்கு அப்பால் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்த கதைபோன்று எமது உயிரிலும் மேலாக நேசிக்கின்ற நபி(ஸல்) அவர்களை நின்தனை செய்கின்ற,அல்லாஹ்வுக்கு சவால்விடுக்கின்ற அளவுக்கு இந்த நாட்டில் மத சுதந்திரம்கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் எமது இளைஞர்களின் கொதித்துக்கொண்டிருக்கின்ற இரத்தம் முஸ்லிம் உலமாக்கள், மத தலைவர்களின் மத போதனைகள்மற்றும் வேண்டுதல்களினால் அமைதியாக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் பாரிய விபரீதங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பொறுமைகாத்திருக்கின்றோம்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இச்சமூகத்திற்கு ஏற்படுகின்ற சவால்களைவென்றெடுப்பதற்கு முஸ்லிம் உம்மா என்ற அடிப்படையில் அனைவரும் ஒற்றுமைப்படவேண்டும். முஸ்லிம் சமூகத்தை கூறுபோடுகின்ற பிரதேசவாத நச்சுக் கருத்துக்களுக்களைமுஸ்லிம் சமூகத்தில் பரப்புகின்ற நயவஞ்சகர்கள் தொடர்பாக மக்கள் மிகுந்தஅவதானத்துடன் இருக்க வேண்டும் என்பதோடு இவ்வாறான போலிப் பிரச்சாரங்களினால்எமது கட்சியின் தலைமையினை ஒருபோதும் மாற்ற முடியாது எனவும் பிரதி அமைச்சர்எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -