பாதயாத்திரைக்கு தயார் : சர்வமத வழிபாடுகளில் மஹிந்த அணியினர்...!

ன்றிணைந்த எதிரணியினர் அரசுக்கெதிரான தமது எதிர்ப்பை வெளிக்காட்டும் முகமாக ஒழுங்கு செய்துள்ள ஆர்பாட்டப் பேரணி ஆரம்பமாவதற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டியிலுள்ள சர்வமத ஸ்தானங்களுக்கு விஜயம் செய்து சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டனர்.

கண்டி கட்டுகலை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்திற்கு விஜயம் செய்த போது கோவில் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணமூர்த்தி கோவிந்த சாமி மற்றும் நாகலிங்கம் நிறுவனத் தலைவர் இரத்தினசபாபதி மோகன் ஆகியோர் வரவேற்றதுடன் நிர்வாக அறங்காவலர் முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஷவை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். ஒன்றிணைந்த எதிரணியினர் விசேட பூஜையிலும் கலந்துகொண்டனர்.

இக்குழுவில் பாராளுமன்ற அங்கத்தவர்களான தினேஷ் குணவர்தன, மகிந்தானந்த அளுத்கமகே, கெஹெலியா ரம்புக்வெல்ல, விமல் வீரவன்ச, லொகான் ரத்வத்தை, உதய கம்மன்பில, பவித்ராதேவி வன்னியாரச்சி, சீ.பீ.ரத்நாயக்கா, ரோகித அபேகுணவர்தன, நாமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் திஸ்ஸ வித்தாரண மற்றும் மதுமாதவ அரவிந்த உடபட பலர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -