நிந்தவூர் மாவட்ட தொழிற் பயிற்சி நிலையத்தில் உதவி கணிய அளவையாளர் பாடநெறி ஆரம்பம் - உதவிப்பணிப்பாளர்

சுலைமான் றாபி

நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் இவ்வாண்டிற்கான புதிய பாட நெறியாக உதவி கணிய அளவையாளர் ( Assistant Quantity Surveyor) NVQ 4 பாட நெறியானது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 01 ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட தொழிற் பயிற்சி நிலைய உதவிப்பணிப்பாளர் திரு. ரி. வினோதராஜா தெரிவித்தார்.

இது சம்பந்தமாக மேலும் அவர் தெரிவிக்கையில்;

மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் இளைஞர் யுவதிகளுக்கு தொழிற் கல்வியை வழங்குவதனூடாக சிறந்த எதிர்காலத்தை அமைக்க வழிகாட்டுவதே எமது நோக்கமாகும். இன்றிருக்கின்ற போட்டிச் சந்தையில் கேள்வி அதிகமாக இருக்கின்ற பாடநெறிகளை அரச நிறுவனமான தமது தொழிற்பயிற்சி நிலையம் மூலம் குறைந்த செலவில் நிறைந்த பயனை அடைந்து கொள்ள அர்ப்பணிப்புடன் செயட்படுவதாகவும், அதன் ஒரு அங்கமாகவே உதவி கணிய அளவையாளர் பாடநெறியை உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இப்பயிற்சி நெறிக்கான நேர்முகத்தேர்வுகள் இம்மாதம் (29) ம் திகதி வெள்ளிக்கிழமை வரை தமது மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெறும் எனவும் தெரிவித்தார். 

மேலும் 6 மாத கால இப்பாட நெறி, 6 மாத வெளிக் களப் பயிற்சியை பூர்த்தி செய்கின்ற விடத்து குறித்த பயிலுனர் NVQ 4 தர சான்றிதழை பெற முடியும் எனவும் அதனை தொடர்ந்து குறித்த துறையில் பட்டப்படிப்பை அரச பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்யும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -