குச்சவெளியில் சற்றுமுன் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி...!

கிண்ணியன்-

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலப்பையாற்று பிரதேசத்தில் இன்று (8) சற்று முன்னா் நடந்த வீதி விபத்தொன்றில் ஒரு இளைஞன் பலியானதுடன் மற்றுமிருவா் படு காணமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர கிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

திருகோணமலை, நாச்சிக்குடா பிரதேசத்தைச் சோ்ந்த 24 வயதான தாஹா பவாஸ் என்பவரே பலியானவராவார். முகம்மது சுகைல், முகம்மது நிலூபா் ஆகியோரே காயமடைந்த இளைஞா்கள் ஆவா்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, நான்கு நண்பா்கள் இரு மோட்டார் சைக்கிளில் குச்சவெளி பிரதேசத்தை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்த போது, இரு மோட்டார் சைக்கிளும் ஒன்றோடு ஒன்று கொழுவுப்பட்ட நிலையில் மின் கம்பம் ஒன்றில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பலியானவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும். விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சசெளிப் பொலிஸார் தெரிவித்தனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -