எம்.வை.அமீர்-
கடந்த 36 வருடங்களாக இப்பிராந்தியத்தில் தலைசிறந்து விளங்கும் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழக வீரர்களுக்கு கடின பந்து கிறிக்கட் சீருடை வழங்கும் நிகழ்வும், இப்தாரும் சாய்ந்தமருது சீ பிறீஸ் கேட்போர் கூடத்தில் 2016-07-03 ஆம் திகதி கழகத்தின் தலைவர் மக்கள் வங்கியின் சிரேஷ்ட முகாமையாளர் எம்.எஸ்.எம்.மசூட் தலைமையில் அதன் செயலாளர் ஏ.சீ.ஏ.நஜீமுடைய வழிநடத்தலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் எம்.எம்.எம்.முஸ்தபாவுடைய புதல்வர் தற்போதைய மையோன் குருப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றிஸ்லி முஸ்தபா கலந்து சீருடைகளை வழங்கிவைத்தார். விசேட அதிதியாக இலங்கை கிறிக்கட் கட்டுப்பட்டுச் சபையின் அம்பாறை மாவட்டப் பிரதிநிதி சித்தாத் லியனாராச்சி கலந்துகொண்டார்.
சீருடை வழங்குதல் மற்றும் நிகழ்வுக்கு பூரண அனுசரணையை றிஸ்லி முஸ்தபா வழங்கியிருந்த அதேவேளை எம்.எஸ்.எம்.இர்ஷாத் ஒரு தொகை விளையாட்டு உபகரணங்களையும் கழகத்துக்கு வழங்கிவைத்தார்.
நிகழ்வின் இறுதியில் றிஸ்லி முஸ்தபாவுக்கும் சித்தாத் லியனாராச்சிக்கும் நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்ட அதேவேளை ஏ.எம்.எம்.றிபாஸின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்ததுடன் இப்தார் நிகழ்வும் இடம்பெற்றது.