அஸ்மி ஏ கபூர்-
இன்று பொதுபல சேனா தொடர்பான உண்மைகளும் நோர்வேயின் பிண்ணனியுடன் இவை இடம் பெறுகின்ற என்கிற விடயங்களும் தெளிவு படுத்தப்பட்டு வருகின்ற சூழலில் எவற்றின் கோரப் பிடியிலிருந்து சமுகத்தை மீட்டெடுக்க முஸ்லீம்கள் வாக்களித்து ஆட்சியை நிறுவினார்களோ அவர்களால் இதை கையாளுகின்ற முறை புரியாமல் தள்ளாடுகிற அதிகார ஒழுங்கில்
எமது தலைவர்கள் மடல் எழுவதும் இரண்டாம் தர அதிகாரிகளை வைத்து சமரசம் பேசுவதையும் அவதானிக்க முடிகிறது.
மிகவும் காத்திரமாகவும் நிதானமாகவும் கையாள வேண்டிய இவ்வாறன பிரச்சினையை நடுவீதிக்கு இழுத்து நடு நிலை சிங்கள சமுகத்தையும் முஸ்லீம் சமுகத்திற்கு எதிராக பேச வைக்கிற ஒரு வகையான போக்கை இவ்வாறன பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்கின்ற தலைவர்கள் முன்னெடுப்பதை காணக் கூடியதாக உள்ளது.
எதை எடுத்தாலும் மகிந்த ராஜபக்ச வினுடைய கதையும் பொதுபல சேனாவின் கதையும் சிலருக்கு அரசியல் பேச்சாகி போன சூழலில்
மகிந்த ராஜபக்ச விட்டு வருவதற்கு எவ்வளவு கைமாகைமாறாக பெறப்பட்டது என குழப்பத்தில் உள்ள செயலாளர் தெளிவுபடுத்த வேண்டும்.
ரங்காவுடான முரண்பாடும் நாமலின் செயற்பாடுகளும் என்ன காரணம் என் மற்றயவர்கள் கூற வேண்டும் பெரிய தலைவர்களை எல்லாம் கொன்று குவித்த பயங்கரவாதத்தின் சுடு கலன்களுக்கு முன் தன் உயிரைப் பணயம் வைத்த அதாஉல்லாஹ் தான் மறைந்த தலைவருக்கு நிகரான தலைவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஒரு உதாரணத்தை மட்டும் சொல்ல வேண்டும் அதாஉல்லா அதிகாரத்தில் இருந்த போது நஸார் ஹாஜியாரோடு நோன்பு திறக்க வந்த மு,கா தலைவர் அதாஉல்லா வின் மூக்கை தொட்டு விட்டு வருவாதாக பொத்துவிலில் சொன்னார்அ டுத்த முறை வருகின்ற போது மாகாணசபை இன்றைய உறுப்பினர் உள்ளிட்டவர்கள் நின்று தடுத்தனர்அடுத்த முறை மா.சா.உறுப்பினர் அழைத்து வந்த போது தடுக்கப்பட்டார்
ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் இரண்டு இடத்தில நோன்பு திறக்க பட்டது இன்று அதாஉல்லா வின் பா.உ.பதவி பறிக்கப்பட்ட பின் நோன்பும் இல்லை தலைவரும் வரவில்லை தேவை முடிந்தது உதிரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதே போல் அட்டாளைச்சேனை இம்முறை பா.உ அமைச்சர்களை எல்லாம் அழைத்து மிகப் பெரிய அளவில் இப்தார் எதற்காக? உங்களுக்கு அது இல்லை எல்லாத்தையும் தலைவர் பார்ப்பார் என்பது போல..
எனவே இவ்வாறு தனது அரசியல் தேவைகள் நிறைவு செய்ய எடுக்கின்ற முயற்சியில் ஒரு வீதத்தையாவது இந்த சமுகம் தொடர்பில் எம்மவர்கள் கரிசனை கொள்வார் களா? வரலாறு மீண்டு வரும் போது குதிரைச்சேனை பல போராட்ட வெற்றிகளையும் பதுறுப் படைவீரர் பலத்தையும் எதிர் காலத்தில் பெறும்எ ன்பதில் ஐயமில்லை.