ஐசே நீங்கள் நிராகரிக்கப்பட்டவர்...! மக்களைக் கொன்றவர்கள் பேசாதீர்கள் -றிஷாத் ஆவேஷம்

ஐசே நீங்கள் நிராகரிக்கப்பட்ட ஒருவர், நீங்கள் ஆயுதம் தூக்கி எல்லாரையும் சுட்டுக்கொண்ட ஆக்கள். நீங்கள் தமிழ் மக்களுக்கு அநியாயம் செய்த ஆக்கள், பிச்சைக்காரனின் புண்ணைக் காட்டி பிச்சை எடுப்பதுபோல நீங்கள் தமிழ் மக்களின் துன்பங்களை வைத்து அரசியல் செய்யிற ஆக்கள், உங்களால தமிழ் மக்களை ஏமாத்தி அரசியல் நடத்த முடியும் முஸ்லீம்களை ஏமாற்ற முடியாது. என ஆவேசமாக சுரேஸ் பிரேமச்சந்திரனை நோக்கி கடும் வார்த்தைகளை அள்ளி வீசிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நீங்கள் செய்த அனியாங்களை மறந்துபோட்டு இப்ப வடக்கு மாகாணசபையை வச்சுக்கொண்டு நாங்கள் தான் அதிகாரத்தை எடுத்தோம் எங்களிடம் ஆணை இருக்கிறது என்று ஒரு மண்ணாங்கட்டியும் செய்யாம விட்டுப்போட்டு என்ன செல்லுறியள். பாரம்பரிய குடியேற்றம் என்றுதானே போட்டிருக்கிறார்கள் புதிய குடியேற்றங்களை அல்ல என்றார் கோபவார்த்தைகளை பொழிந்து தள்ளினார்.

வடக்கு மாகாண சபையையோ, தமிழ்ப் வடக்கைப் பிரதிநித்துவப்படுத்தும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களையோ உள்ளடக்காது அண்மையில் சிங்கள மற்றும் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை உள்ளடக்கிய மீள்குடியேற்ற செயலணி ஒன்று மத்திய அரசினால் உருவாக்கப்பட்டிருந்தது.

இவ் விடையம் தொடர்பில் கடந்தவரம் வட மாகாணத்தில் மீள்குடியேற்றும் அதிகாரம் மாகாண சபைக்கு இருப்பதாக முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தோடு அரசு நியமித்துள்ள செயலணிக் குழுவை நிராகரிப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இவ்விடையம் தொடர்பாக அரச தொலைக்காட்சியில் நேரடி விவாதம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்விவார நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு நடந்துகொண்டுள்ளார்.

முன்னதாக கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரிசாட்,

இரண்டரை வருட ஆட்சிக்காலத்தில் வடக்கு முஸ்லீம்களுக்கு ஒரு மலசலகூடத்தைக்கூட கட்டிக்கொடுக்காத விக்கினேஸ்வரன் ஐயா அரசு நியமித்துள்ள செயலணிக் குழுவை நிராகரிப்பதாக கூறுகின்றார். மீள்குடியேற்றம் மத்திய அரசு செய்கின்ற பணியாகும். அந்த மக்களிற்காக வடக்கு மாகாணசபை அதுவரை எந்த ஒரு பணியையும் செய்யவில்லை என அமைச்சர் ரிசாட் பதிதியூன் குற்றஞ்சாட்டினார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதுவரை அந்த மக்கள் குறித்து தம்மிடம் பேச்சுவார்த்தைநடத்தக்கூட வரவில்லை. இப்போது தம்மைக்கேட்டுத்தான் மீள்குடியேற்றம் செய்யவேண்டும் என கூறுகிறார்கள் என்றார்.

அதற்குப் பதிலளித்துப்’பேசிய சுரேஸ் பிரேமச்சந்திரன் எடுத்த எடுப்பில் பொய் கூறக்கூடாது ஒன்றும் நடக்கவில்லை என்று கூறக்கூடாது. முஸ்லீம் மக்களைத் துரத்தியது பிழை என்று ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்டிருக்கிறது. இது சிங்களக் குடியேற்றத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு அமைச்சரவை அணியே தவிர இடம்பெயர்ந்த மக்களை குடியேற்றுவதற்காக என்று நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வடக்கு மாகாணசபை அங்கத்துவம் பெறாத இத்தகையை செயலணியை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. என்றார்.

அதன்போது சுரேஸ் பிரேமச்சந்திரனின் பேச்சினால் சினமடைந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நான் பொய் சொல்லுறன் எண்டு அவர் சொல்லுகிறார் என்ன பொய் எண்டு சொல்லவேண்டும். நீங்கள் கௌரவமா நடந்துகொள்ளுங்கோ என்றார்.

மீண்டும் அதற்கு பதிலளித்துப்பேச சுரேஸ் பிரேமச்சந்திரன் முற்பட்டபோது,

ஐசே நீங்கள் நிராகரிக்கப்பட்ட ஒருவர், நீங்கள் ஆயுதம் தூக்கி எல்லாரையும் சுட்டுக்கொண்ட ஆக்கள். நீங்கள் தமிழ் மக்களுக்கு அநியாயம் செய்த ஆக்கள், பிச்சைக்காரனின் புண்ணைக் காட்டி பிச்சை எடுப்பதுபோல நீங்கள் தமிழ் மக்களின் துன்பங்களை வைத்து அரசியல் செய்யிற ஆக்கள், உங்களால தமிழ் மக்களை ஏமாத்தி அரசியல் நடத்த முடியும் முஸ்லீம்களை ஏமாற்ற முடியாது என கடும்தொனியில் பேசினார் அமைச்சர்.



கடந்த வெள்ளிக்கிழமை நேத்ரா தொலைக்காட்சியில் இடம்பெற்ற “வெளிச்சம்” நிகழ்ச்சியில் தனது துணித்தலான பேச்சினை பேசிய அமைச்சர் றிஷாட் பதியுத்தீனுக்கும், பிரதியமைச்சர் ஹரீஸுக்கும் நன்றிகளை பொதுமக்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கின்றோம். என அம்பாறை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். 

அதில் அவர்கள் தெரிவித்துள்ளாவது;

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் இரு தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் இரு முஸ்லிம் மக்கள் பிரிதிநிதிகளும் கலந்துகொண்ட குறித்த நிகழ்வின் நடுவில் இடம்பெற்ற சூடான விவாதத்தின் போது மிகவும் சூடாக தங்களது விவாதங்களை மேற்கொண்டிருந்தனர். இதன் போது தமிழ் பிரதிநிதிகள் தங்களது ஆவேசமான பிழையான கருத்துக்களை முன்வைத்தனர்.

இதன் மூலம் தமிழ், முஸ்லிம் மக்களிடத்திலையே தங்களை பிழையான கருத்துக்களை குறித்த நிகழ்ச்சி மூலம் முன்வைக்கலாம் என்று நம்பிருந்தனர் ஆனால் அது அனைத்தும் புஸ்வனமாகிப் போனது குறிப்பாக அங்கு கலந்துகொண்ட தமிழ் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட முக்கிய கருத்தாக “அனைத்து சேவைகளை நீங்கள் முஸ்லிங்களுக்கே செய்கின்றீர்கள், தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை” என்று ஓர் தவறான கருத்தை முன்வைத்து ஏதோ அவர்கள் தமிழ் மக்களுக்குத்தான் இவ்வாறான சேவையை மேற்கொண்ட போல் தங்களது விவாதங்களை மேற்கொண்டனர். 

இதனை இவ்வாறான பிழையான கருத்துக்களை முன்வைத்த இருவர்களுக்கும் எதிராக முஸ்லிம் பிரதிநிதிகள் தங்களது சூடான விவாதங்களை நாம் வாழ்த்தத்தான் வேண்டும். குறிப்பாக இந்த விவாதத்தின் மூலம் முஸ்லிம் தமிழ் பிரிவு அல்ல என்ற ஓர் விடையத்தை (உண்மையை) அங்கு மக்களிடத்திலையே இந்த முஸ்லிம் பிரதிநிதிகள் தங்களது விவாதங்களை மேற்கொண்டனர். 

மேலும் தங்களது இவ்வாறான சூடான விவாதங்களின் முஸ்லிங்களுக்கு தேவையான பலவகையான தேவைகளை வலியுறுத்த வேண்டும் என்பதுடன் முஸ்லிங்களுக்கு ஆதரவாக தங்களது முற்றும்முழுதான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வாறான வானொலி, தொலைக்காட்சி நிகழ்வுகளை இன்னும் அதிகரிப்பதன் மூலம் பலவகையான சமூக சார்ந்த விடையங்களை மேற்கொள்வது அவசியம் என நாங்கள் வலியுறித்துகிறோம் என அம்பாறை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -