வேலை இல்லாமல் கஷ்டப்பட்ட கோடீஸ்வரரின் மகன்...!

வாழ்வின் கஷ்ட நஷ்டங்களை அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக குஜராத் கோடீஸ்வரர் தன் மகனை கேரளாவில் வேலை தேடி பிழைத்துக்கொள்ளும்படி அனுப்பியுள்ளார். குஜராத்தின் சூரத் நகரத்தை சேர்ந்த கோடீஸ்வரர் ஷிவ்ஜி, ஒரு வைர வியாபாரி. இவர் 71 நாடுகளில் வைர தொழில் செய்து வருகிறார். இவரது சொத்து மதிப்பு 6 ஆயிரம் கோடி. இவரது 21 வயது மகன் தார்வயா அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்து வருகிறார்.

மிகவும் செல்வ செழிப்புடன் வளர்ந்த தன் மகன் தார்வயா, வாழ்வின் கஷ்டங்களையும், வறுமையும், வேலை கிடைப்பதன் சிரமத்தை புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, ஒருமாதம் தனியாக வேலை தேடி, அதை வைத்து பிழைத்துக்கொள்ள வேண்டும் என்று கேரளாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். மகனும் தந்தையின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு, கேரளாவிற்கு வந்து வேலை தேடியுள்ளார். ஆனால் 60-க்கு அதிகமான இடங்களில் நிராகரிக்கப்பட்ட பிறகு அவருக்கு பேக்கரி ஒன்றில் வேலை கிடைத்துள்ளது. அவசர தேவைக்காக என் தந்தை கொடுத்த பணத்தை பயன்படுத்தாமல் ஒரு மாதத்தை வெற்றிகரமாக கழித்து விட்டார்.

இந்த ஒருமாத காலத்தில் தான் கற்றுக்கொண்ட முக்கிய பாடம், ”மற்றவர்களிடம் கரிசணத்தோடு நடந்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். பெரும்பாலான நேரங்களில் மற்றவர்களிடம் நாம் கடினமாக நடந்து கொள்கிறோம்” என்று தார்வயா தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -