அஸ்லம் எஸ்.மௌலானா-
கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் பதில் கடமை அடிப்படையில் சோலை வரி அறவீட்டில் ஈடுபட்டுள்ள எட்டு ஊழியர்களுக்கு மாநகர சபையினால் அடையாள அட்டை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலி அவர்களின் வழிகாடடலில் கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக் அவர்களின் முயற்சியினால் மாநகர சபை ஊழியர்களின் வினைத்திறனையும் வருமான சேகரிப்பினையும் அதிகரிக்க செய்யும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பல்வேறு வேலைத் திட்டங்களுள் ஓர் அங்கமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊழியர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று திங்கடகிழமை (04) மாலை மாநகர சபையில் நடைபெற்றது. இதில் மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி, கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக் ஆகியோர் கலந்து கொண்டு அடையாள அட்டைகளை வழங்கி வைத்தனர்.
கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் வீடு வீடாக சென்று சோலை வரி அறவீட்டில் ஈடுபடுகின்ற இவ்வூழியர்கள் தொடர்பில் தேவையேற்படின் அவர்கள் அணிந்திருக்கும் இவ்வடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு விபரங்களை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக் தெரிவித்தார்.
இவ்வூழியர்களுக்கு விரைவில் சீருடை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.