இலங்கையில் சர்வதேச இஸ்லாமிய மாநாடு...!

பிரதமரின் ஆலோசனைக்கு அமைய சர்வதேச இஸ்லாமிய மாநாடு ஒன்றை இலங்கையில் நடவத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போழுது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.

குறித்த மகாநாடு எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக் ஆசியாவை பிரதிநிதித்துவப்படுத்தி 17 நாடுகள் இந்த இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொள்வதற்கு இதுவரை விருப்பம் தெரிவித்துள்ளதாக தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மாலைத் தீவு ஆகிய தெற்கு ஆசியா நாடுகளும், இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன், புரூணை, மியன்மார், வியட்நாம், சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய தென்கிழக் ஆசியா நாடுகளும் பங்கேற்கவுள்ளன.

“International Conference on the Role of Religion in Pluralistic and Democratic Society in South and Southeast Asia Perspectives of Islam” 

எனும் தொனிப்பொருளில் இந்த மாநாட்டை நடத்துவதட்கான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -