சாய்ந்தமருது ப.நோ.கூ. சங்கம் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும் - கலாநிதி. ஏ.எம். ஜெமீல்

எம்.வை.அமீர் -
ர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களின் விசேட பணிப்பின்பேரில் சாய்ந்தமருது ப.நோ.கூ. சங்கத்திற்கு கணனி, போட்டோக் கொப்பி இயந்திரங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் மேற்படி சங்க வளாகத்தில் நடைபெற்ற வைபவத்தில் அ.இ.ம. காங்கிரஸின் பிரதித்தலைவரும், அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி. ஏ.எம். ஜெமீல் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இவ்வுபகரணங்களை வைபவரீதியாக வழங்கி வைத்தார். சங்கத்தின் புதிய தலைவர் எம்.எம். உதுமாலெவ்வை தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் கலாநிதி ஜெமீல் தொடர்ந்து உரையாற்றுகையில்

சாய்ந்தமருது ப.நோ.கூ. சங்கம் பல பெறுமதியான சொத்துக்களை வைத்திருந்தும் கடந்த பல வருடங்களாக எதுவித செயற்பாடுகளுமின்றி நஷ்டமடைந்துள்ளதுடன் மக்களுக்கு எவ்வித சேவைகளும் செய்யப்படாமையானது வருந்தத்தக்கது. கூட்டுறவுச் சங்கங்கள் மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டது. தற்போது கூட்டுறவுச் சங்கங்கள் அதன் உன்னத நோக்கங்களை மறந்து சுயநல நோக்கங்களுக்காக செயற்படுவது மாற்றியமைக்கப்படல் வேண்டும். இச்சங்கத்தின் அரிசியாலை நவீன தொழிநுட்பத்துடன் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும். இச்சங்கத்தின் பெறுமதியான நிலங்கள் பாதுகாக்கப்படல் வேண்டும். அவைகளில் வருமானமீட்டக்கூடிய வகையில் தொழில் பேட்டைகள் ஆரம்பிக்கப்படல் வேண்டும். சங்கத்தின் லொறி வருமானம் ஈட்டக்கூடிய வகையில் இயங்க வேண்டும். இவ்வாறான சகல அபிவிருத்திகளுக்கும் என்னால் முடியுமான உதவி ஒத்தாசைகளை அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் ஒத்துழைப்புடன் செய்வதற்கு திடசங்கற்பம் கொண்டுள்ளேன். புதிய இயக்குனர் சபையானது இந்த அமானிதத்தை மிகவும் பொறுப்புடன் கையேற்று செயற்பட வேண்டும். ஊழல் மோசடிகள் இங்கு இடம் பெறக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டதோடு இச்சங்கத்தின் அபிவிருத்திக்கு இங்கு வருகை தந்துள்ள கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரும், மற்றும்அதிகாரிகளும், கூட்டுறவுத் திணைக்களமும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

இந் நிகழ்வில் சங்கத்தின் தலைவர் எம்.எம். உதுமாலெவ்வை, கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஜனாப். லத்தீப், சாய்ந்தமருது வர்த்தக சங்கத் தலைவர் அல்-ஹாஜ் உஷா சலீம் ஆகியோர் உரையாற்றியதுடன் சாய்ந்தமருது அ.இ.ம. காங்கிரஸின் மத்திய குழுத்தலைவர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம். அன்வர் உட்பட சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -