அமெரிக்க டொலரின் பெறுமதி குறைந்த நிலையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக லண்டன் தங்க சந்தை அறிவித்துள்ளது. இந்தநிலையில், இரண்டு வருடங்களுக்கு பின்னர், எப்போதும் இல்லாதவகையில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் இப்படியான நிலை ஏற்பட்டிருக்கவில்லை என வர்த்தக தரப்பினர் குறிபிட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அவுன்ஸ் ஒன்றின் விலை ஆயிரத்து 300 அமெரிக்க டொலராக இருந்ததன் விலை தற்போது ஆயிரத்து 315 தசம் ஐந்து ஐந்து அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் அடுத்த வாரம் பிரித்தானியாவில் மக்கள் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளமையே என லண்டன் தங்க சந்தை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், இலங்கையிலும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.