முஸ்லிம்களுக்கெதிரான வீண்பழிகளைக் கவனமாகக் கையாள வேண்டிய தருணம் இது - சாய்ந்தமருதில் றிஷாத்

முஸ்லிம் சமூகத்தின் மீதான வீண் பழிகளையும், அபாண்டங்களையும் நாம் பொறுமையாகவும், அவதானத்துடனும் கையாள்வதன் மூலமே அவற்றை வெற்றிகரமாக முறியடிக்க முடியும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலய மைதானத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை (24/06/2016) இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர், இப்தாரில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றினார். 

அமைச்சர் இங்கு மேலும் கூறியதாவது,

இன்று முஸ்லிம் சமூகம் பல்வேறு இன்னல்களையும், கஷ்டங்களையும் எதிர்கொள்கின்றது. இனவாதிகள் நம் சமூகத்தின் மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தி வருகிறார்கள். பள்ளிவாசல்களை அதிகளவிலே முஸ்லிம்கள் நிர்மாணிக்கின்றார்கள் என்று போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து, சகோதர இனங்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டுவதற்கான திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இஸ்லாம் எப்போதுமே சகோதரத்துவத்தையும், சமாதானத்தையுமே வலியுறுத்தி வரும் மார்க்கமாகும். நாம் ஏனைய இனங்களுடன் பரஸ்பரம் நல்லுறவுடனேயே வாழ்ந்து வருகிறோம். இனியும் அவ்வாறுதான் வாழ முற்படுகின்றோம். 

இஸ்லாமியர்களாகிய நாம் எமக்குள் எத்தகைய பேதமைகள் இருந்தாலும் ஐக்கியமாகவும், ஒற்றுமை உணர்வுடனும் வாழ்ந்தால், இனவாதிகள் தமது எண்ணத்தை இலகுவில் நிறைவேற்ற முடியாது. இன்று நமது சமூகம் பலவிதமான பிரச்சினைகளையும், சவால்களையும் சந்தித்து வருகின்றது. இறைவனின் துணையுடன் இவற்றை சரி செய்வதற்கு ஈமானிய அடிப்படையில் எம்மைத் தயார்படுத்த வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். 

இஸ்லாமிய அடிப்படையில், பெருமானாரின் போதனைகளைப் பின்பற்றி நாம் வாழ்ந்து வந்தால், இந்தப் பிரச்சினைகளை இலகுவில் முறியடிக்க முடியும் என அமைச்சர் கூறினார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -