திருகோணமலை : 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவர்கள் கைது

எப்.முபாரக்-

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமாவதி பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில், 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்து கர்ப்பமாக்கிதாகச் சந்தேகிக்கப்படும், சிறுமியின் பக்கத்து வீட்டிலுள்ள 50 மற்றும் 55 வயதுடைய இருவரை, கந்தளாய் தலைமைய பொலிஸின் சிறுகுற்றத்தடுப்பு பொலிஸார், இன்று ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

இந்தச் சிறுமி வயிற்றுவலியெனத் தெரிவித்து பெற்றோருடன் கந்தளாய் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். அவரை, சோதனைக்குட்படுத்திய போது, குறித்த சிறுமி 2 மாத கர்ப்பமாக இருக்கும் விடயம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து, சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், இவ்விருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். சிறுமி, கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார் எனத் தெரிவித்த பொலிஸார், கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -