அம்பாறை, தமண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாங்காமம் பிரதேசத்தில் அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகா வித்தியாலயத்தில் தரம்-10 இல் கற்று வந்த மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த தஷ்லிம் அப்ரித் (வயது 16) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
இன்று திங்கட்கிழமை உயிரிழந்த மாணவனும் அவரது நண்பர்களும் அக்கரைப்பற்றுப் பிரதேசத்திலிருந்து வாங்காமம் பிரதேசத்துக்கு சென்றுள்ளனார். இந்நிலையில், அங்குள்ள ஆற்றில் இவர்கள் குளித்துக்கொண்டிருந்தனர்.
இதன்போதே மேற்படி மாணவன் நீரில் மூழ்கியுள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.