ஆட்சியாளர்கள் மோஷமானவர்களாக மாறும் போது நாட்டில் ஆபத்துக்கள் அதிகரிக்கின்றது எனவும் இதனால் நாட்டு மக்கள் அனைவரும் கரம் கோர்த்துப் பிரார்த்திப்போம் என ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்சியில் கோடையினால் மக்கள் கடுமையாக கஷ்டப்பட்டார்கள். அதனையடுத்து கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் அவதிப்பட்டனர். இதுபோக, வரலாறு காணாத நெருப்பு நேற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொஸ்கம சாலாவ முகாமில் ஏற்பட்ட தீக்கான காரணத்தை அப்பாவி இராணுவ வீரர்களின் கவனயீனம் எனக் காட்டுவதற்கு சிலர் முயற்சி எடுத்து வருவதாகவும் கம்மம்பில கருத்துத் தெரிவித்துள்ளார்.