கோத்தபாய ராஜபக்சவை அதிகாரத்துக்கு கொண்டு வர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முயற்சிக்குமானால் தாம் அரசாங்கத்துடன் இணைந்திருக்கப் போவதில்லை என்று முன்னாள்ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம், நாட்டை கொள்ளையிட்டவர்களை விரட்டுவதற்காகவே அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் கோத்தபாயவை அதிகாரத்துக்கு கொண்டு வர முயற்சித்தால், தாம், அரசாங்கத்துடன் தொடரப் போவதில்லை என்று சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.
அத்தனகலையில் வார இறுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தாம் முடமாகிப் போயுள்ளதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டதாக குறிப்பிட்ட சந்திரிக்கா, தற்போது தாம் முடமாகி உள்ளோமா? என்பதை பார்க்க முடியும்என்றும் தெரிவித்துள்ளார்.