ஜனாதிபதியின் மேதினக்கூட்டத்தில் அப்படி என்னதான் பேசினார் அதாஉல்லா...?

காலியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேதினக்கூட்டத்தில் அதாஉல்லா கலந்து கொண்டு பேசினார் அவரது பேச்சினை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக உட்பட பலரும் புன்முறுவலோடு பாராட்டி வாழ்த்தி கைகொடுத்தனர் 

அவ்வாறு அதாஉல்லா என்ன பேசினார்? 

மேடையிலே இரட்டை அர்த்தங்களோடு ஆழமான கருத்துக்களை முன்வைத்தார். அதாவது :-

கணவன் மனைவி ஒருவீட்டில் இரு அறைகளில் தூங்கிக்கொண்டு பிள்ளை பெற்றெடுக்க முடியாது என சுதந்திரக்கட்சிக்குள் தற்போதுள்ள பிளவை சுட்டிக்காட்டிய அவர் இப்பிளவினைப் பாவித்து நரி தன் வேலையை செய்வதற்கு திட்டம் தீட்டுகிறது என எச்சரித்து சுட்டிக்காட்டினார். 

15 வருடங்களுக்கு மேல் கூட்டணியின் தாய்க் கட்சியான எஸ் எல் எப் பி யை காப்பாற்ற வேண்டியதும் நாளைய தலைவர்களை உருவாக்கவேண்டியதும் நமது கடமையாகும் என பேசிய அவர் ஐ தேசிய கட்சியில் ஒரு சிறந்த தலைவராக ரணசிங்க பிரேமதாசாவை எடுத்துக் கொண்டாலும் அவர் கடைசி நேரத்தில் விடுதலைப் புலிகளுடன் தேனிலவு கொண்டாட முற்பட்டு அவரது தரத்தினை குறைத்துக் கொண்டதோடு கொலைசெய்யவும் பட்டார் அதற்க்கு பிற்பாடு ஐ தே கட்சியில் தலைமைத்துவப் பஞ்சம் நிகழ்கிறது எனவும் தெரிவித்தார் .

மேலும் நாட்டின் நன்மை கருதியும் நாட்டு மக்களின்மீது அக்கறை செலுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை முன்கொண்டு சென்ற அத்தனை தலைவர்களும் slpf ல் இருந்துதான் வந்தனர் என கூறிய அவர் தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -