மஹிந்த ராஜக்ஷவின் உகண்டாப் பயணத்துக்கு பணம் கொடுத்தது தவறுதான் - அமைச்சர் ராஜித

யாராக இருப்பினும், தமது தனிப்பட்ட தேவைக்காக அரசாங்கத்திடம் பணம் பெற்றுக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவின் உகண்டாப் பயணத்துக்கு பணம் கொடுத்தது, தவறான விடயம் தான்' என்று அரசாங்கம் நேற்றுத் தெரிவித்தது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியதாவது,

'நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுள், தனது சொந்த வெளிநாட்டு பயணத்துக்காக அரசாங்கத்திடம் பணம் கேட்டவர் மஹிந்த ராஜபக்ஷ ஒருவரே ஆவார். அதுவும், தான் முன்னாள் ஜனாதிபதி என்பதால், விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்துக்கொண்டிருக்காமல் ஹோட்டலில் தங்கவைக்க வேண்டும் என்றும், தனது பயணத்துக்கான ஏனைய செலவுகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வெளிவிவகார அமைச்சிடம் மஹிந்த கோரியிருந்தார்.

எனினும், எந்த தலைவரும் இவ்வளவு சலுகைகளைக் கேட்காத காரணத்தினால், அவருக்கான விமான டிக்கெட்டுக்கான கட்டணத்தை மட்டுமே நாம் ஏற்றுக்கொண்டோம்' என்றார்.

இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பிடித்துள்ள அமைச்சரொருவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருவதாகவும், அந்தக் கறுப்பாட்டின் முகத்திரையை விரைவில் கிழிக்கவுள்ளதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.TM
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -