4 வயதுச் சிறுமியோடு கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒரு தாய் வந்திருந்தாள். "தொடர்ந்து இரண்டு மாதங்களாக காய்ச்சல் இருக்கின்றது. பல இடங்களில் மருந்தெடுத்தும் ஊரில் எல்லா டொக்டர்மாறும் இந்த பிள்ளைக்கு நோய் ஏதும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
அப்படி இருந்தும் இவளுக்கு இரவில் கடுமையான காய்ச்சல் வருகிறதே என்ன செய்வது ?. என்றால்...
உடலில் ஏற்படும் நோயின் காய்ச்சல் வருவது வழக்கம். அதுபோலவே உள்ளத்தில் ஏற்படும் பாதிப்பு காய்ச்சலாக பிரதிபலிக்க கூடும் என்பதால் " உள்ளத்தை பாதிக்கும் எதாவது நிகழ்வுகள் சிறுமிக்கு ஏற்பட்டுள்ளதா என விசாரித்தேன். "
'' அப்படி எதுவும் இல்லை டொக்டர். அவள் கேட்பதையெல்லாம் வாங்கி கொடுக்கிறேன். அன்பு, ஆதரவோடு நடந்து கொள்கிறோம்." என்றார்.
" பிள்ளையின் வாப்பா என்ன செய்கிறார் ? "என்று கேட்டேன்" கச்சேரியில் இலிகிதராக இருந்தார். 4 மாதங்களுக்கு முன் சம்பளமற்ற லீவைப் போட்டுகொண்டு சவுதிக்கு சென்றார். அவருக்கு ஒரு சகோதரி. அவருக்கு வீடு, காணி எதுவும் இல்லை. திருமண வயதை அடைந்துவிட்டதால் காணி வாங்கி வீடு கட்டுவதற்காக சவுதிக்கு உழைக்கச் சென்றிருந்தார். " என் குழந்தைக்கு எல்லாவற்றையும் கொடுக்கிறேன், இருந்தபோதும் தொடர்ந்தும் எதோ ஒன்றை இழந்தவள் போல் இருக்கிறாள்.
அவள் அடிக்கடி " வாப்பா எங்க உம்மா என்று கேட்பாள்."
" நான் வாப்பா சவுதியில் இருக்கிறார் " மகள் என்று சொல்வேன்.
" சவூதி எங்கே இருக்கிறது? " என்று கேட்பாள்.
"கடலுக்கு அப்பால் இருக்கிறது" என்று சொல்வேன். வாப்பாவை பற்றி இவ்வாறு அடிக்கடி கேட்பதும், வாப்பாவை பார்க்க கடல்கடந்து செல்லவேண்டும் என்று சொல்லிகொண்டிருபேன்.
ஒருநாள் மாலைப்பொழுதில் நிலவின் வெளிச்சத்தில் குடும்பத்தவர்கள் ஒன்று சேர்ந்து கடற்கரைக்கு சென்றிருந்தோம்.
கடற்கரை மணலில் சிலர் அமர்ந்து பேசிகொண்டிருக்க, மற்றைய சிருவர்களுகடன் எனது குழந்தையும் விளையாடி கொண்டிருந்தாள். திடீரென அவளை காணவில்லை. எனது குடும்பத்தார் அனைவரும் தேடி ஓடினோம். என் மகள் மட்டும் கடலோரத்திலிருந்து கடலுக்குள் இறங்கி நடந்து கொண்டிருந்தாள்.
சில நிமிடங்கள் கழித்து என் மகளை தேடியிருப்பின் அவள் கிடைத்திருக்க மாட்டாள். அலை அவளை எங்கோ கொண்டு போய்ச் சேர்த்திருக்கும்.
எப்படியோ குடும்பத்தவர்கள் சேர்ந்து என் பிள்ளையை காப்பற்றி விட்டனர்.
"எல்லா பிள்ளைகளும் கரையில் விளையாட நீ மட்டும் ஏன் கடலுக்கு சென்றாய்? " மா என்று என் தம்பி கேட்க.
"கடலுக்கு அங்கால சவுதியில் வாப்பா இருப்பதாக உம்மா சொன்ன: அதான் வாப்பாவை பார்க்க போனேன் " என்றால் என் மகள். என்று அழுதுவிட்டே அந்த தாய் சொன்னால்.
சிறுமி வாழும் சமூக அமைப்பில் இருக்கும் சீதனம் என்ற நோய், அந்த சின்னச்சிறு உள்ளத்தை எந்தளவு பாதிக்கப் பட்டிருகிறது பாருங்கள். கடலுக்குள் பாசத்தை தேடிய இந்தக் குழந்தை போல் எத்தனை குழந்தைகள் இப்படியெல்லாம் பாதிக்கபட்டிருகின்றனர் என்று பலருக்கு தெரியாது.
சீதனம் என்ற சமூக நோயின் விளைவுகளை சுமக்கும் நிர்பந்தம் எதுவும் அறியாத பச்சிளம் பாலகர்களை பதித்துவிட்ட உண்மைச் சம்பவங்கள் பலவுள்ளன.
சீதனத்தின் நேரடி விளைவாகவோ அல்லது பக்க விளைவாகவோ கருத படாத பல பிரச்சினைகளை அலசிப் பார்த்தால் அவை சீதனம் என்ற ஆணிவேருடன் இணைந்திருக்கும் பக்க வேர்கள் என்பதைக் கண்டு கொள்ள முடியும் .
எனது டயரியின் மறுபக்கம்.
Dr.எம். எல். எம்.றயிஸ்.