கிழக்கு முதல்வர் முஸ்லிம் என்பதால் சில இனவாதிகள் திரிவுபடுத்துகின்றனர்


கடந்த 20.05.2016 ம் திகதி சம்பூர் தமிழ் வித்தியாலத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கிழக்கு முதல்வர் நசீர் அஹ்மத் திருகோணமலை சம்பூர் பிரதேசத்திற்கு பொறுப்பான கட்டளையிடும் தளபதியுடன் நடந்து கொண்ட  விதம் குறித்து ஒரு சில சிங்கள, தமிழ் ஊடகங்கள் திரிவுபடுத்தி கூறியது விடயமாக அங்கு நடந்த உண்மைகள் இதுதான்

குறித்த பாடசாலை கடந்த யுத்த காலத்தில் கடற்படையினரால் 2006.03.25ம் ஆண்டு காலப்பகுதியில் ஆக்கிரமிக்கபட்டிருந்தன.
பின்னர் 20.05.2016ம்  திகதி கடற்படையினரால் கையளிக்கபட்டது 
பின்னர் டேவிட் பீரிஸ் கம்பனியினால் குறித்த பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் வைபவம் ஏற்பாடு செய்ய பட்டிருந்தன.
அந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு முதல்வர் அழைக்ககப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் அதே நாளில் அமெரிக்க தூதுவரும் சம்பூர் மீள்குடியேற்றம் தொடர்பாக வருகை தர இருந்தமையால் கிழக்கு மாகாண ஆளுநர் ஏற்பாடுகளை கடற்படை தளபதியிடம் ஒப்படைத்திருந்தார்.
பின்னர் 
குறித்த நிகழ்விற்கு முதல் அமைச்சர் அழைக்கபட்டிருந்தும்  நெறிமுறை தவறி முதல்  அமைச்சரை நடத்தியமை தொடர்பில்தான் அவர் குறித்த நிகழ்வில் அவ்வாறு நியாயத்தை கேட்டுக்கொண்டு கடிந்து கொண்டார் 

உண்மையில் குறித்த நிகழ்வு  யாரால் ஏற்பாடு செய்யபட்டிருக்க வேண்டும் கிழக்கு மாகாணத்திற்கு உட்பட்ட பாடசாலை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தம்டயுதபாணி அவர்களால் ஏற்பாடு செய்யபடிருக்க வேண்டும் இருந்தும் எவ்வாறு ஆளுநர் கடற்படை தளபதியிடம் ஒப்படைப்பார் இன்னும் கிழக்கு மாகாண அதிகாரங்களை இழக்கின்ற மாகாண சபையாக நாம் இருக்க முடியாது கடந்த காலத்தில் நடந்ததை போன்று இன்னும் இன்னும் இச்சபையை நடாத்த அனுமதிக்க முடியாது கடற்படை தளபதியுடன் கடிந்துகொண்டது மாத்திரமன்றி ஆளுனரிடமும் நீங்கள் முறையாக நடக்கவில்லை முழுப்பொறுப்பும் நீங்களே என்ற தொனியிலும்  முதல் அமைச்சர் பேசினார் 

கிழக்கு மாகாணத்திற்கு அதிகாரம் வேண்டும் என்று கேட்பவர்கள் முதல் அமைச்சர் அமைச்சர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் காரணம் என்று கூறுபவர்கள் இவ்வாறு அதிகாரம் பறிக்கப்படும் நேரத்தில் நியாயத்தை கேட்டால் அது முறையற்றது என சில சிங்கள ஊடகங்கள் திரிவு  படுத்தி தெரிவிப்பது முஸ்லிம் முதல் அமைச்சர் என்பது மாத்திரமன்றி அதிகாரங்களை வழங்கினால் சில இனவாதிகளுக்கு  கிழக்கு மாகாணம் சிறு பான்மையினரிடத்தில் சென்று  விடும் என்ற அச்சமே திரிவு படுத்துவதற்கு காரணம்.
 
தொடர்ந்தும் நல்லாட்சி ஏற்படுத்த பட்டதன் பின்னர் கிழக்கு மாகாணத்தை கிழக்கு ஆளுநர் தன்னிச்சையாக கொண்டுசெல்ல அனுமதிக்க முடியாது
கிழக்கு மாகாணத்தை தவிர ஏனைய மாகாணங்களை ஒப்பிட்டால் கிழக்கு மாகாணத்தில்தான் படையினர் உட்பட சில அரச அதிகாரிகள் மற்றும் ஆளுநர் தலையீடு அதிகம் அவற்றை பிழையான நிலைமைகள் தோன்றும்போது அந்த இடத்திலேயே சுட்டிக்காட்டி  நிறுத்தவேண்டும் அதைத்தான் கிழக்கு முதல்வர் செய்தார்.

வட மாகாண முதல்வர் தமது மாகாண சபை அதிகாரங்களை பாதுகாப்பதில் முன்னிற்பதை 
உறுதியாக கொண்டு வட மாகாண ஆளுணரை மாற்றி அமைத்த சம்பவம் மாத்திரமன்றி தமது அதிகாரங்களில் யார் கை நுழைத்தாலும் ஆளும் அரசாங்கத்தை விமர்சிப்பது நாம் அறிந்த விடயம் 
ஆனால் கிழக்கு முதல்வர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் முதல் அமைச்சர் என்பதால் தான் இன வாதிகள் கூக்குரலிடுவது முஸ்லிம்களிடத்தில் இருந்து முதல்வர் பதவியை பறிக்க போடும் வேஷம் மாத்திரமன்றி சிலர் இந்த நிகழ்வில் குளிர்காய எத்தனிக்கின்றனர்.
என்பதுதான் உண்மை என்று  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :