புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் சத்தியாகிரக போராட்டம்...!

பா.திருஞானம்-
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்திருந்தது. இதில் அமைச்சரும் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோகனேசன், அமைச்சரும்; முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவருமான பழனி திகாம்பரம்,ரஇராஜாங்க அமைச்சரும் ; முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான அ.அரவிந்தகுமார், வடிவேல் சுரேஸ், வேலுகுமார், திலகராஜ் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.ராஜாராம், சோ.ஸ்ரீதரன், சரஸ்வதி சிவகுரு ஆகியோரும் கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு வழங்கியுள்ள 2500.00 ரூபா சம்பள அதிகரிப்பை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதை வழியுறுத்தியே இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தோட்ட முதலாளிமார் சமமேளனம் இந்த தொகையை வழங்குவது தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பொழுதும் இதுவரையில் அதனை வழங்குவதற்கு சம்மதம் தெரிவிக்காத நிலையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சரும் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோகனேசன், அமைச்சரும்; முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவருமான பழனி திகாம்பரம், ரஇராஜாங்க அமைச்சரும்; முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் இந்த தொகையை தோட்ட கம்பனிகள் கட்டாயம் வழங்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பதை தவிர வேறு வழியில்லை எனவும் தெரிவித்தனர்.

இந்த தொகையை வழங்க மறுக்கும் கம்பனிகள் எவ்வாறு தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் மூலம் சம்பள அதிகரிப்பை மேற்கொள்வார்கள் எனவும் கேள்வி எழுப்பினர். மேலும் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக தெரிவிக்கின்ற கம்பனிகள் ஏன் தோட்டங்களை அரசாங்கத்திடம் கையளிக்க முன்வருவதில்லை எனவும் கேள்வி எழுப்பியதோடு தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதற்கான முழுமையான பொறுப்பையும் தோட்டக் கம்பனிகளே ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறினர்.ஏனெனில் இன்று தோட்ட கம்பனிகள் தோட்டங்களை முறையாக பராமரிக்காமையின் காரணமாகவே அவை நட்டத்தில் இயங்கி வருகின்றது என்பதையும் இவர்கள் இங்கு சுட்டிக்காட்டினர்.

இந்த நாட்டில் 200 வருடங்களை கடந்து வாழும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் மாத்திரம் ஏன் போராட்டத்தின் மூலம் சம்பள உயர்வை பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு துர்பாக்கியமான நிலை இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியதோடு இதற்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்து இடுகின்ற தொழிற்சங்கங்களும் பதில் கூற வேண்டும்.நாங்கள் அரசாங்கத்தில் இருந்தாலும் எமது மக்களின் பிரச்சினைளை சுட்டிக்காட்ட என்றும் பின்நிற்க மாட்டோம் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -