தமிழ் மக்களுக்கு வழங்கப்படுகின்ற அதிகாரப் பகிர்வு முஸ்லிம் மக்களுக்கும் வழங்கப்படவேண்டும் - அ.அஸ்மின்

மிழ் மக்களுக்கு எவ்விதமான அதிகாரப் பகிர்வு வழங்கப்படுகின்றதோ அதே விதமான அதிகாரப் பகிர்வு முஸ்லிம் மக்களுக்கும் வழங்கப்படவேண்டும்; என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதியும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ. அ.அஸ்மின் அவர்கள் விடுத்துள்ள மே தின செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேசிய தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் உலகின் உழைக்கும் மக்கள் தமது உரிமைகளுக்காக குரல்கொடுப்பதை நாம் காணுகின்றோம்; எனினும் இந்த நாட்டிலே சிறுபான்மை சமூகங்கள் நீண்டகாலமாக தாம் எதிர்நோக்கிவரும் உரிமை மறுப்புகளுக்கு எதிராக நீண்டகாலமாகவே குரல்கொடுத்து வருகின்றார்கள்; 

அதன் வடிவங்கள் வித்தியாசப்பட்டிருக்கின்றன, இருப்பினும் இலக்கு ஒன்றாகவே இருந்திருக்கின்றது, தொழிலாளர்களின் உரிமைகளுக்கு மேலாக மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களே இந்த நாட்டிலே நீண்டு நிலைத்திருக்கின்றன; வன்முறை ரீதியான எல்லாப் போராட்டங்களும் நிராகரிக்கப்படவேண்டியவைதான் அதனை நாம் வரவேற்க முடியாது. 

ஜனநாயக வழிமுறைகளில் எமது உரிமைகளை நாம் வென்றெடுக்க வேண்டும். இப்போது நாட்டிலே நிலவுகின்ற நல்ல அரசியல் சூழ்நிலையில் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யத்தக்க வகையில் அரசியல் யாப்பு மாற்றமொன்றிற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனை நாம் வரவேற்க வேண்டும் குறிப்பாக தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தம்மை பரஸ்பரம் அங்கீகரித்து இந்த நாட்டிலே நிரந்தரமான தீர்வொன்றினைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்; அந்தவகையில் தமிழ் மக்களுக்கு எவ்விதமான அதிகாரப் பகிர்வு வழங்கப்படுகின்றதோ அதே விதமான அதிகாரப் பகிர்வு முஸ்லிம் மக்களுக்கும் வழங்கப்படவேண்டும்.

இதனை முஸ்லிம் சமூகமும் கோரவேண்டிய அதே சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களும், சிங்கள மக்களும் இதனை உறுதி செய்தல் அவசியமாகும். இதன் அடிப்படையிலேயே இந்த நாட்டில் நிரந்தர சமாதானம், அம்மைதி, நிலைத்து நிற்கும் அபிவிருத்தி என்பன பெற்றுக்கொள்ள முடியுமானதாக இருக்கும். 

உழைக்கும் மக்களின் உரிமைகள் குறித்துப் பேசப்படுகின்ற இத்தகைய நல்ல சந்தர்ப்பத்தில் இந்த நாட்டின் அனைத்து மக்களுக்குமான உரிமைகள் வென்றெடுக்கப்படுவதை நாம் உறுதிசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன். என்றும் அவர் வெளியிட்டுள்ள மே தின செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

தகவல் என்.எம்.அப்துல்லாஹ்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -