நாச்சியாதீவு பர்வீன்-
மல்வானையில் சில பிரதேசங்களில் சடுதியாக நீர்மட்டம் உயர்ந்து நீரின் வேகமும் அதிகரித்தது, மீட்புப்பணியில் ஈடுபட வந்த கடற்படையினர் வேகமான நீரோட்டத்தினை கருத்தில் கொண்டு சிலபிரதேசங்களுக்கு செல்வதை தவிர்த்தனர்.
அங்கு செல்வதன் மூலம் இந்த வெள்ள நீரில் தாமும் அடித்து செல்லப்படலாம் என அவர்கள் கருதி அந்தப் பகுதிகளுக்கு செல்லாமல் பின்வாங்கினார்கள். கடற்படையினர் செல்ல மறுத்த இடங்களுக்கு பேருவளை சகோதரர்கள் சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர் என மல்வானை ரக்ஷபான நிறுவாகத்தின் அங்கத்தவர் ஒருவர் கூறினார்.
இவ்வாறான மற்றும் சில சம்பவங்கள் வெல்லம்பிட்டிய பிரதேசத்திலும பேருவளை சகோதரர்களினால் நடாத்தப்பட்டதாக முகநூலின் வாயலாக அறியக்கூடியதாக இருந்தது. இவ்வாறான சமூக நலனுக்காக தமது உயிரைப்பணயம் வைத்து இயங்கும் சகோததரர்கள் இதயத்து நன்றிக்குறியவர்கள். அவ்களுக்காக பிரார்த்தனை செய்வது நமது கடமையாகும்.