தனது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களை நீக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ள தீர்மானத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடை விதித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்படி, தனது பாதுகாப்புக்கு தற்பொழுது ஏற்கனவே இருந்த 103 இராணுவ வீரர்களும் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக இன்றைய சிங்கள நாளிதழொன்று தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பொலிஸாரை நியமிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை பாதுகாப்பு அமைச்சு எடுத்திருந்தது. இதனை கடந்த 7 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலும் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
