நான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டு அரசாங்கம் அமைத்ததாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஆட்சியமைத்து, கடந்த அரசாங்கத்தை தோல்வியடையச் செய்ததாக கூறுகின்றனர்.
உண்மையில் நாட்டுக்கு புதிய வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கி, நாட்டுக்கு ஒத்துவராத வேலைத்திட்டத்தை தோல்வியடையச் செய்ததே நான் செய்தபணி என்பதை நான் கூறிக்கொள்ளவிரும்புகிறேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 1956 எஸ.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகாவின் மக்கள் புரட்சி சுதந்திர வெற்றியின் 60 ஆவது ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
