இந்து சமுத்திரத்தின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் என்பவற்றுக்கான கேந்திர மத்திய நிலையமாக இலங்கையை மீண்டும் மாற்றுவது தனது நோக்கு என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்குத் தேவையான சூழலொன்றை உருவாக்குவதற்காக நாட்டில் நிதிக் கொள்கையை இன்னும் இலகுவாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களை எதிர்வரும் ஜூன் மாதம் வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவுக்கு உத்தியோகபுர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (8) பீஜிங் நகரில் அந்நாட்டில் முக்கிய வர்த்தகர்களை சந்தித்து கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.
