அரச ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், சமுர்த்தி பயனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்...!

எஸ்.எம்.சன்சீர்-
லங்­கையின் தேசிய கைய­டக்க தொலை­பேசி சேவை வழங்­கு­ன­ரான ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல் நிறு­வ­ன­மா­னது தற்­பொ­ழுது அரச ஊழி­யர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள், சமுர்த்தி பய­னா­ளிகள் மற்றும் மூத்த பிர­ஜை­க­ளுக்கு மாதாந்த கட்­டண அடிப்­ப­டையில் ஸ்மார்ட் போன்கள் மற்றும் மொபிடெல் பெக்­கேஜ்­களை வழங்க முன்­வந்­துள்­ளது.

இந்­நி­க­ழ்ச்­சித்­திட்­ட­மா­னது தொலைத்­தொ­டர்பு மற்றும் டிஜிட்டல் கட்­ட­மைப்பு தொடர்­பான அமைச்சின் எண்­ணக்­க­ருவின் அடிப்­ப­டையில் அமைச்சர் ஹரிண் பெர்­ண்­டோவின் வழி­காட்­டலின் கீழ் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­துடன், அனைத்து இலங்­கை­யர்­க­ளுக்கும் நவீன தொழில்­நுட்ப வச­தி­களை அனு­ப­விப்­ப­தற்­கான வாய்ப்­பினை ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தற்­காக அரசு மேற்­கொண்டு வரும் முயற்­சி­க­ளுக்கு உந்து சக்­தி­யாக இச் செயற்­றிட்டம் அமைந்­துள்­ளமை விசேட அம்­ச­மாகும்.

இச்­செ­யற்­றிட்­டத்தின் கீழ் அரச ஊழி­யர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள், சமுர்த்தி பய­னா­ளிகள் மற்றும் மூத்த பிர­ஜை­க­ளுக்கு மாதாந்த கட்­டண அடிப்­ப­டையில் ஸ்மார்ட் போன்கள் மற்றும் மொபிடெல் பெக்­கேஜ்கள் வழங்­கப்­படும். அத்­துடன் அரச ஊழி­யர்கள் மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் ஸ்மார்ட் போன்­களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிட்­டி­யுள்­ளமை விசேட அம்­ச­மாகும்.

மொபிடெல் நிறு­வனம் கடந்த 2008 ஆம் ஆண்டு அரச ஊழி­யர்­க­ளுக்கு “மொபிடெல் உப­ஹார” சேவை­யினை அறி­மு­கப்­ப­டுத்தி நாட்டின் தொடர்­பாடல் துறையில் மிகப் பெரி­யதோர் புரட்­சி­யினை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தமை நாம் யாவரும் அறிந்­ததே.

2012 ஆம் ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட “மொபிடெல் உப­ஹார ப்ரோட்பான்” சேவையின் மூலம் அரச ஊழி­யர்­க­ளுக்கு மிக சிறந்த சேவை­யினை வழங்­கி­யி­ருந்­த­துடன் தற்­பொ­ழுது மேம்­ப­டுத்­தப்­பட்ட மிகச் சிறந்த சேவை­யினை வழங்க நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது.

நவீன தொழில்­நுட்­பத்தின் அனு­கூ­லத்­தினை அனை­வரும் அனு­ப­வித்­திடும் பொருட்டு முன்­னெ­டுக்­கப்­படும் இச்­செ­யற்­றிட்­டத்தின் மூலம் தொலை­பே­சி­யொன்­றினை பெற்றுக் கொள்­வ­தற்கு எந்­த­வொரு முற்­கொ­டுப்­ப­ன­வி­னையும் செலுத்தத் தேவை­யில்லை. 

மாறாக மீள திருப்பிப் பெறக்­கூ­டிய (Refundable Deposit) வைப்­பாக சிறு தொகை­யினை வைப்­பிட வேண்டும். தொலை­பே­சியின் பெறு­ம­தி­க்குரிய செலுத்த வேண்­டிய தொகை­யாது 24 மாதங்­க­ளுக்கு மாதாந்தம் மொபிடெல் பிற்கொ­டுப்­ப­னவு பட்­டியல் கட்­ட­ணத்­துடன் சேர்க்­கப்­படும். ஒப்­பந்த கால முடிவின் போது ஆரம்­பத்தில் வைப்பு செய்­யப்­பட்ட தொகை­யா­னது மீள் அளிப்பு செய்­யப்­படும்.

மேலும் இத்­திட்­டத்தின் கீழ் வழங்­கப்­படும் கைய­டக்கத் தொலை­பே­சி­க­ளா­னவை அதனை தயா­ரித்து விநி­யோகம் செய்யும் நிறு­வ­னத்தின் உத்­த­ர­வா­தத்­தினை கொண்­டிருக்கும். தேசிய அடை­யாள அட்டை மற்றும் ஏனைய ஆவ­ணங்­களைச் சமர்ப்­பித்து ஆரம்பக்கட்ட பரிசீலனைகளின் பின்னர் மேற் குறித்த பிரிவினைச் சேர்ந்த நபர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் அல்லது நவீன தொழில் நுட்பத்துடனான கையடக்கத் தொலைபேசியுடன் மொபிடெல் பிற்கொடுப்பனவு பொதியொன்றும் வழங்கப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -