கூரைத் தகடுகளும் கொங்கிரீட் சுடு மணலும் முஸ்லீம் அரசியலின் அடையாளமாகி போனதே - அஸ்மி

மது அடையாளம் முஸ்லீம் நாம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனித்து இரண்டாவது இனமாகவும் வாழ்கிறோம். வட கிழக்குக்கு வெளியே பல்வேறு பட்ட சமுக கட்டுமானங்களுடன் வாழ்கிறோம். வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கிற முஸ்லீம்களது அரசியல் சிந்தனையும் வகிபாவமும் வெளி மாவட்ட மக்களின் சமுக ஒழுங்கு முறைகளிலிருந்து வேறுபடும்.

இச் சூழலில் ஓரே நாட்டில் வாழும் மக்களாவோம்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் நாம் ஓரே மொழி பேசும் மக்களின் உரிமையை பெற ஆரம்பமான போராட்டம் இனத்துவ அடையாளத்தை முன்னிருத்தி நாம் வஞ்சிக்கப்பட்டதால் தமிழ் இன போராட்டத்திலிருந்து வேறுபட்டு எமக்கான பாதையை தெரிவு பெற வேண்டியானது.

ஆனால் தமிழர்கள் அதே போராட்ட வழி முறையில் பல்லாயிர சன சமுத்திரத்தை ஆயுத முனையில் காவு கொடுத்து அது முடிவுற்றும் ஜனநாயக வழி முறைகளிலும் அதே பயணத்தை மக்களும் அவர் தம் அரசியல் இயக்கமும் முன்னெடுக்கிறது.

நாம் சிங்கள பேரினவாதிகளால் துரத்தியடிக்கப்பட்டு தமிழ் தேசிய வாதிகளால் வஞ்சிக்கப்பட்ட நிலையில் எதை நோக்கி நகர்ந்திருக்க வேண்டும் ஆனால் இன்று எதை நோக்கி நகர்ந்து இருக்கிறோம்.

இன ஒடுக்கு முறைக்குட்பட்ட கனதியான நேரத்தில் ஆரம்பிக்கப் பட்ட எமது உரிமைக்கான அரசியல் இயக்கமும் ஏனைய அரசியல் கட்சிகளும் இழந்தவைகளை பெறுவதை தவிர்த்து தமது சுய நல அரசியலையும் தனி நபர் அடையாளத்துக்காக தமக்கான நலன்களை அனுபவிக்கும் கூட்டம் அல்லது பிரதேச அடிப்படையில் முஸ்லீம் சமுகத்தை பிரித்தும் விட்டனர்.

இன்று எமது சமுகத் தேவைகளை பெற நாம் முனையும் போது வீணாண அரசியல் போக்கினுடைய சுய நலத்தால் ஒன்று சேர முடியாதவாறு அரசியல்வாதிகளின் அதிகார வரையறைகளால் பிரிக்கப்பட்டிருக்கிறது.

தொகுதி, பிரதேசம், குறிச்சி என அரசியல் பிரமுகர்களின் வரைவு களால் பிரிந்திருக்கிறோம்.

தமிழ் தேசியம் அரசாங்கத்தோடு இணைவு அரசியல் எப்போதாவது செய்திருக்கிறதா? அவர்கள் தம் பிரதேசம் அபிவிருத்தி ஏதும் அடையவில்லையா? யுத்தம் நிறைவடைந்த பின் மீள் குடியேற்றம் எங்கு துரிதமாக மேற் கொள்ளப்பட்டிருக்கிறது?

தமது சுயாதீனத்தை வலியுறுத்தி வட மாகாண சபையால் அரசியல் நகல் ஒன்றை சமர்பிக்கிற அளவுக்கு அவர்களது ஜனநாயக வழிமுறை முன்னேற்றமடைந்திருக்கிறது என்பதை நாம் நினைத்து பார்க்க கூட முடியாத நிலையிலே இருக்கிறோம்.

ஆனால் அரச பங்காளியாக நல்லாட்சியின் உருவாக்கிகளாக வீற்றிருக்கும் அமைச்சரவை கனவான்களிடம் எம் சமுகம் வேண்டி நிற்பது

தேசிய பட்டியல்
அமைப்பாளர் கள்
இணைப்பாளர்கள்
சில்லறை கடைகள்
மருந்து கடைகள்
அரச தொழில்
கொங்கிறீட் வீதிகளின் கொந்தராத்து
நிருவன தலைமை 
நிருவனங்களின் கிளைகளை
கட்சிகளின் பதவி நிலை போட்டி

இதுவா எம் சமுகத்தின் தேவை

இவை தேவைகளின் நிமித்தம் நாம் எந்த சமுகமாக இருந்தாலும் பெற்றுக் கொள்ளலாம்.

எமது பிரதான விடயமாக நாம் பார்க்கிற அரசியல் அமைப்பு மாற்றத்தில் எமதுசமுக விடயங்களை முன் மொழிதல் உள் வாங்கல் தீர்வுகாணப்படாமலேயே இரண்டாவது சந்ததியும் காண விளையும் காணிப் பிரச்சினைகளை தீர்த்தல்.

குறிப்பாக வட்டமடு, அம்பலம் ஓயா,  திருகோணமலை மாவட்ட காணி உள்ளிட்ட பல்வேறு பிரதேங்களும் இராணுவத் தேவைகளுக்காகப் பெறப்பட்ட எமது மக்களின் நிலம் குறிப்பாக அஷ்ரப் நகர், ஒலுவில் பொதுத் தேவைகளினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதாரம் குறிப்பாக ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்கான நிலம், நுரைச்சோலை எமது மக்களின் நெல் விவசாயத்தை பாதித்த கரும்பு செய்கை இனவாதிகளால் காவு கொள்ளப்பட் ட நுரைச்சோலை முஸ்லீம்களுக்குரிய 500 சுனாமி வீடுகள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை தூய நோக்கத்தோடு துரிமாக மீள் குடியேற்றம் செய்து அவரது சந்ததியேனும் சொந்த நிலம் காண வழி செய்தல் வடக்கு கிழக்கில் நிரந்த தீர்வு வருவதாக இருந்தால் யார் பேச வேண்டும் எதை பேச வேண்டுமன சமுகமே முடிவு செய்து கொடுக்க வேண்டும்.

இதை விடுத்து எந்த ஊருக்கு எப்ப எம்.பி . நீ பழசா கட்சிக்கு நான் பழசா என்று பேசுகிறோம். பணத்துக்காகவும் சலுகைகாகவும் கொடை வள்ளலாகலாம் சமுக தலைமை ஆக முடியாது என்பதை அவர்களுக்கு நினைவூட்டுங்கள். இப்போதைய தேவைகளை விடுத்து நிரந்தர தீர்வுக்கு வழி யேற்பட வலியுருத்துங்கள் ஊடக சமுக வலைகளை அதற்காக பயன்படுத்துங்கள்.

இறுதியாக, 1976 அம்பாரையிலிருந்து வந்து அம்பலம் ஓயா காணிகளை அபகரித்த. பேரினவாதிகளின் கதை தீர்வின்றி ஓய்ந்து 1990 களில் இனவாதிகளால் வட்டமடுவிலும் பொத்தானையிலும் சுட்டும் வெட்டியும் போட்டு காணிகளை அபகரித்த துயர் கிடப்பில் கிடக்க நாம் அரசியல்வாதிகளை தேசிய தலைமைகளாக தலையிலே தூக்கி வைத்திருக்கிறோம்.

இதுவும் கடந்து போகும் மேற்கில் மரித்தால் கிழக்கில் உதிக்காமலே போய் விடும். என்றுதான் எம்மை நாம் தேற்ற வேண்டும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -