ஜாதிக பல சேனா அமைப்பு 2014ம் ஆண்டு கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பொது பல சேனா அமைப்பினர் அத்து மீறி புகுந்து குழப்பம் ஏற்படுத்தியமை மற்றும் புனித அல்குர்ஆனை அவமதித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜரான பொது பல சேனா அமைப்பினர் குறித்த வழக்கை சமாதானமாக முடித்துக்கொள்வோம் எனக் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
அதேவேளை இன்று நீதிமன்றில் ஆஜராகாத தேரருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 19ம் திகதிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள்ளப்படவுள்ளது. thanks (daily ceylon)
