தனி­யாக பொழுதைக் கழித்த காதல் ஜோடிக்கு பிரம்­ப­டி தண்­டனை நிறை­வேற்­றம்...!

காதல­ருடன் தனி­யாக பொழுதைக் கழித்த போது கையும் கள­வு­மாக பிடிபட்ட 19 வயது யுவ­தி­யொ­ரு­வ­ருக்கு பொது­மக்கள் முன்­னி­லையில் 50 பிரம்­ப­டிகள் தண்­டனை நிறை­வேற்­றப்­பட்ட சம்­பவம் ஒன்று இந்­தோ­னே­சி­யாவில் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது.

சுமாத்ரா பிராந்­தி­யத்தில் பண்டா ஏக் பிர­தே­சத்தைச் சேர்ந்த குறிப்­பிட்ட யுவதி மீது, மத சட்­டத்தை மீறும் வகையில் 21 வயது இளைஞர் ஒரு­வ­ருடன் தனித்து பொழுதைக் கழித்­த­தாக குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் மேற்­படி பிராந்­தி­யத்தில் மது பாவனை உள்­ள­டங்­க­லான மத சட்­டத்தை மீறும் குற்­றச்­சாட்­டு­களின் கீழ் பிரம்­படி தண்­டனை நிறை­வேற்­றப்­பட்ட 18 பேரில் மேற்­படி யுவ­தியும் அவ­ரது காத­லரும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

அவர்கள் அனை­வ­ருக்கும் அந்த பிராந்­தி­யத்­தி­லுள்ள பள்­ளி­வா­ச­லொன்­றுக்கு அரு­கி­லி­ருந்த மேடையில் தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

மத பாரம்­ப­ரிய ஆடை அணிந்து மேடையில் மண்­டி­யிட்டு அமர்ந்­தி­ருந்த குறிப்­பிட்ட யுவ­திக்கு பிரம்­படித் தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டதும் இரு பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் அவ­ருக்கு அங்­கி­ருந்து செல்­வ­தற்கு உதவி செய்­கின்­றனர்.

தொடர்ந்து யுவ­தியின் காதலர் உட்­பட ஏனை­ய­வர்­க­ளுக்கு பிரம்­படித் தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­கி­றது.

இந்தோனேசிய சட்டங்களின் பிரகாரம் திருமணமாகாத பெண்கள் உறவினரல்லாத ஆண் ஒருவருடன் தனித்து காணப்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -