41 வயதான பிரீத்தி ஜிந்தா ரகசிய திருமணம்..!

பாலிவுட் திரையுலகில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் பிரீத்தி ஜிந்தா. தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘உயிரே’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த பிரித்தி ஜிந்தா, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் அணியின் ஒரு பங்குதாரராகவும் விளங்கினார்.

சில ஆண்டுகளாக சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு கிரிக்கெட், நண்பர்களுடன் ஜாலியாக உலகம் சுற்றுவது என பொழுதை போக்கி வந்த பிரித்தி ஜிந்தா, தற்போது திருமண பந்தத்துக்குள் நுழைந்துள்ளார்.

41 வயதான பிரீத்தி ஜிந்தா தன்னுடைய நீண்டநாள் காதலரான ஜீன் குட்டினெப்பை நேற்று முன்தினம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்தில் பிரீத்தி ஜிந்தாவின் நெருங்கிய நண்பர்களான சூசன் கான், சுரில்லி கோயெல் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். திருமணத்தை எளிமையாக முடித்துக் கொண்ட பிரீத்தி ஜிந்தா, ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி முடிந்தபிறகு ஏப்ரலில் திருமண வரவேற்பை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, பாலிவுட் பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -