பஸ் விபத்து - மாணவன் பலத்த காயம்..!

க.கிஷாந்தன்-
ட்டன் நகரத்திலிருந்து 03.03.2016 அன்று காலை 7.30 மணியளவில் டயகம நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று பாடசாலை மாணவன் மீது மோதியதால் மாணவன் படுகாயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான்.

இவ்விபத்து தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவருவதாவது,

டிக்கோயா தரவளை பகுதியில் 8 வயதுடைய மாணவன் ஒருவன் தனது வீட்டிலிருந்து பாடசாலைக்கு செல்லும் போது படியில் இருந்து வீதிக்கு இறங்கும் பொழுது அவ்வழியாக வந்த பஸ் மாணவனின் மீது மோதியதாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு இவ்விபத்தினால் அப்பகுதி சுமார் 1 மணி நேரம் பதற்ற நிலையில் காணப்பட்டது.

இதேவேளை அவ்வழியில் போக்குவரத்து சில மணி நேரம் ஸ்தம்பிதமடைந்தது.

இப்பகுதி மக்கள் பாதையை மறித்து ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ள முயற்சித்த போதிலும் பொலிஸாரின் தலையீட்டின் காரணமாக ஆர்ப்பாட்டம் தடுக்கப்பட்டது.

காயமடைந்த மாணவன் தரவளை பாடசாலை ஒன்றில் தரம் 3ல் கல்வி கற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவன் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் தொடர்ச்சியாக தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த மாணவனை பஸ் சாரதியும் நடத்துனரும் குறித்த பஸ்ஸிலேயே ஏற்றிச்சென்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

அத்தோடு சந்தேக நபரான பஸ் சாரதியை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதோடு அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக அட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -