சமூக அக்கறையுள்ள அரசியலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுதிப்படுத்த வேண்டும் - நஸார் ஹாஜி

புகழுக்காகவும் பொருளுக்காகவும் அரசியலை ஒரு மார்க்கமாகத் தெரிந்து கொள்பவர்கள் ஏராளம். ஆனால் சமூக நலன்மீதான உண்மையான அக்கறையால் உத்தப்பட்டவர்களும் அரசியலில் இல்லாமலில்லை. சமூக நலன்களை சீரழிக்கும் விதமாக அரசியல் அதிகாரம் பிரயோகிக்கப்படும் போது அது, தான்சார்ந்த கட்சியாக இருந்தாலும் அதனைச் சுட்டிக்காட்டி தடுத்து நிறுத்த வேண்டியது இத்தகைய அரசியல்வாதிகளின் தார்மீகப் பொறுப்பாகும். தான்

இரண்டாவது வகையைச் சார்ந்தவன்.

பொத்துவில் தொடக்கம் மருதமுனை வரையிலான பிரதேசம் போல் எமது நாட்டில் எங்குமே முஸ்லிம்கள் செறிந்து வாழவில்லை. ஆனால் துரதிஷ்டவசமாக அரசியல் காரணங்களுக்காக கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் பிரதேசவாதம் நீண்டகாலமாக வளர்த்தெடுக்கப்பட்டு வந்திருக்கிறது. அத்தடையினை முதலில் உடைத்தெறிந்து ஐக்கியத்தை ஏற்படுத்திய கட்சி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எமது கட்சியின் இந்த மகிமை தொடர்ந்தும் பாதுகாக்கப்படவேண்டும்.

அக்கரைப்பற்றை, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக கடந்த 15 ஆண்டுகளாக அதாஉல்லா அடக்கி ஆண்ட போதும் கூட பிரதேசவாதம் கடந்த முஸ்லிம் அரசியலின் அடையாளமான எமது கட்சிகயைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இரவுபகலாக எமது பொழுதுகளையும் பொருளையும் இழந்து வெளிப்படையாகப் போராடியவன் என்ற உரிமையில் சில முக்கிய விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

இதனை செய்யாது விடுவது சமூகத்துக்குச் செய்யும் மிகப்பெரும் துரோகமாக அமையும். கட்சியினதும் எமது சமூக ஒற்றுமையினதும் பாதுகாப்பை மையப்படுத்திய எனது இக்கருத்துக்களை சரியாகப் புரிந்து கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

நாட்டில் மலர்ந்திருக்கும் நல்லாட்சி இன்னும் எனது ஊரில் மலரவில்லை. இந்த ஆதங்கம் எனக்கு மட்டுமல்ல. எனதூர் மக்கள் அனைவருக்குமே இருக்கிறது. ஊரின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நாட்டில் நல்லாட்சி மலரவேண்டும். இன ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்தே ஆகவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடுகளுடன் 90மூ க்கு அதிகமான வாக்குகளை வழங்கிய எனதூர் மக்களும் நல்லாட்சி அரசாங்கத்தின் பங்குதாரர்களே. அவர்களுக்குரிய நியாயமான பங்குளை பகிர்ந்தளிப்பதன் மூலம்தான் அக்கரைப்பற்றில் எமது கட்சியை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். மாறாக அவர்களிடம் உள்ளதையே பிடுங்கிக் கொண்டால் கட்சி இன்னும் பலவீனமான நிலைக்கு கொண்டு செல்லப்படும்.

அயல் கி ராமங்களிலுள்ள சகோத ரர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதால் நாமும் மகிழ்ச்சியடைகின்றோம். ஆனால் அக்கரைப்பற்றை பலவீனப்படுத்தவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் அது மேற்கொள்ளப்படுவதை ஒருபோதுமே அனுமதிக்க முடியாது. கல்முனையில் ஒன்பது திணைக்களங்களின் பிராந்திய தலைமைக் காரியாலயங்கள் 

அமைந்துள்ளன. கடந்த காலங்களில் முழுமையான அரசியல் அதிகாரங்கள் இருந்தும் கூட அவற்றைப் பிரித்து அக்கரைப்பற்றுக்குக் கொண்டு வருவதை அதாஉல்லா கூட விரும்பவில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

மாவட்டத்திற்கு ஒரு பிராந்திய முகாமையாளர் காரியாலயம் அமைந்துள்ள நிலையில் தான் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சராக இருந்தபோது கிழக்கு முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசத்தை மையப்படுத்தி அக்கரைப்பற்றுக்கு ஒரு பிராந்திய முகாமையாளர் காரியாலயத்தை அதாஉல்லா கொண்டு வந்தார். அவரது காலத்தில் ஒலுவிலைச் சேர்ந்த ஒரு சகோதரர் பிராந்திய முகாமையாளராக இருந்தார். தற்போது மருதமுனையைச் சேர்ந்த ஒரு சகோதரர் பிராந்திய முகாமையாளராக தங்களால் நியமிக்கப்பட்டுள்ளார். கல்முனைப் பிரதேசத்தில்

இதன் சேவையை விரிவுபடுத்த வேண்டுமானால் ஒரு உபகாரியாலயத்தை நிறுவியிருக்க முடியும். அல்லது திருகோணமலையிலுள்ள பிரதி பொது முகாமையாளர் (னுபுஆ) காரியாலயத்தின் கிளையை தூரத்தைக் காரணம் காட்டி கல்முனையில் அமைத்திருக்க முடியும். இதுபற்றி ஏற்கனவே தங்களின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டிருந்தும் கூட, அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் காரியாலயத்தின் பிரதேச எல்லை துண்டாடப்பட்டு கல்முனையில் ஒரு புதிய பிராந்திய முகாமையாளர் காரியாலயம் நிறுவப்படவிருப்பது அக்கரைப்பற்றை பழிவாங்க வேண்டும் என்பதற்காக செய்யப்பட்டதேயன்றி, கல்முனை மீது கொண்ட அன்பினால் அல்ல என்ற விடயம் அக்கரைப்பற்றில் தெளிவாகவே பேசப்படுகிறது.

இந்த அமைச்சு மட்டுமல்ல. எந்த அமைச்சும் யாரிடமும் நிரந்தரமாக இருப்பதில்லை. நாளை வேறொருவரிடம் இந்த அமைச்சு செல்லும் போது அம்பாறையில் மாத்திரம் மூன்று பிராந்தியக் காரியாலயங்கள் அமைந்திருப்பதை அவர்கள் அனுமதிக்கப்போவதில்லை. அப்போது அதிக

இணைப்பும் வருமானமும் கொண்ட காரியாலயமொன்றுடன் அக்கரைப்பற்று இணைக்கப்படும். அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயத்தின் தகுதி மொத்தமாக பறித்தெடுக்கப்படும். இத்தகைய அநியாயத்திற்கு வழிவகுத்துவிட்டு எவ்வாறு அங்கு எமது கட்சியை வலுவூட்டப் போகிறோம்.

நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம், வட்டமடு விவசாயக்காணிகள், பாடசாலைகளில் ஏற்படுத்தப்பட்டுவரும் அரசியல் தலையீடுகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் என எத்தனையோ தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் இருக்கத்தக்கதாக அவற்றை தீரப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதை விட்டுவிட்டு இல்லாத பிரச்சினை ஒன்றை அக்கரைப்பற்று மக்கள்மீது வலித்து திணிக்கும் இக்கைங்கரியத்தை எமது கட்சி உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். 

பெரும்பான்மை சமூகத்திடமிருந்து எமது பிராந்திய மக்களுக்காக அதாஉல்லா பெற்றுவந்த அதிகாரத்தை கூறுபோட்டுக் கொடுப்பதன் மூலம் எம்மைச் சாதனையாளர்களாகக் காட்டிக் கொள்ளும் இழிநிலை அரசியலை உயரிய நோக்கங்களுடன் ஒழுங்கமைக்கப்பட்ட எமது கட்சி ஒருபோதும் செய்யாது என்ற எனது திடமான நம்பிக்கை வீண்போகாது என நம்புகின்றேன். தேவையற்ற பிரதேச வாதத்தை எமது சமூகத்துள் இது தூண்டிவிடும் என்பதையும் தங்கள் மேலான கவனத்துக்கு மீண்டுமொருமுறை கொண்டுவர விரும்புகின்றேன். 

மேலும் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபை (சுனுயு) பிராந்தியக் காரியாலத்தை சம்மாந்துறைக்கு கொண்டு செல்வதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வருவதையும் நாம் நன்றாகவே அறிந்திருக்கின்றோம். அக்கரைப்பற்று மக்களும் இத்தகைய செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாத இத்தகைய செயற்பாடுகளை கைவிட்டு விட்டு எமது கட்சியின் தரத்திற்கேற்ப அரசியலை நாம் முன்னெடுக்க வேண்டும். அதன் மூலம் எமது ஒட்டு மொத்த சமூக நலன்களையும் தேசிய நலனையும் உத்தரவாதப்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும்.

அக்கரைப்பற்று மக்களின் உணர்வுகளை சரியாகப் புரிந்து கொண்டு பாரபட்சமின்றி அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலமே அவர்களது மனங்களை வெற்றிகொள்ள முடியும். அதுவே எமது கட்சியை அக்கரைப்பற்றில் வேரூன்றச் செய்வதற்குள்ள ஒரே வழி. மாறாக அரசியல் அதிகாரதைக் கொண்டு ஒருபோதும் எனதூர் மக்களை அடிபணியச் செய்ய முடியாது என்பதை ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகிறேன்.

தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காக சரியை பிழை என்றும் பிழையை சரி என்றும் விவாதிக்கும் ஒரு சர்வசாதாரணமாக அரசியல்வாதியாக இல்லாமலும், பதவிபட்டங்களுக்கு ஆசைப்படாமலும் சமூக நலனையும் எமது கட்சியின் நலனையும் பாதுகாக்கவேண்டும் என்ற ஆதங்கத்தால் உண்மையை வெளிப்படையாகவே கூறியிருக்கிறேன். இதன் மூலம் பொறுப்புவாய்ந்த ஓர் சமூகக் கடனை நிறைவேற்றிய திருப்தி எனக்கிருக்கிறது. நிம்மதியாக உறங்குவதற்கு அது எனக்குப் போதுமானது.

கட்சிப்பணியில்,
என்றும் உண்மையுடன்,
நஸார் ஹாஜி,
உயர் பீட உறுப்பினர் - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -