வெளிநபர் ஒருவரை எதிர்த்து தோட்ட மக்கள் எதிர்ப்பு...!

க.கிஷாந்தன்-
கினிகத்தேனை பிளக்வோட்டர் தோட்ட காணியின் ஊடாக வெளிநபர் ஒருவர் பாதை ஒன்றை அமைப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைளுக்குத் தோட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தனியார் காணி ஒன்றுக்கு பிளக்வோட்டர் தோட்டத்தின் ஊடாக பாதை ஒன்றை பலவந்தமாக அமைக்கப்பட்டு வரும் முயற்சி தொடர்பில் தோட்ட நிருவாகம் அட்டன் நீதிமன்றில் வழக்குத் தாக்கலொன்றை ஏற்கனவே செய்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் தோட்ட மக்களுக்கும் வெளி நபரொருவக்குமிடையில் 03.03.2016 அன்று முறுகல் நிலை ஏற்பட்டமையைத் தொடர்ந்து கினிகத்தேனை பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்து விசாரணை நடத்தினர்.

அத்துடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் பிளக்வோட்டர் தோட்டத்துக்கு விஜயம் செய்து இவ்விடயம் தொடர்பில் தோட்ட நிருவாகத்துடனும் மக்களிடமும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -