தென்கிழக்கின் ஆயுர்வேத ஆய்வு நிலையம் வெகுவிரைவில் நிந்தவூரில்...!

நேர்காணல் அட்டாளைச்சேனை மன்சூர்-

லங்கையில் முதன்முதலாக ஆயுர்வேத ஆய்வுநிலையம் ஒன்று எதிர்வரும் மார்ச் மாதத்தில் திறக்கப்படவிருக்கிறது. 

இதன் ஆரம்ப உருவாகத்திற்கு உறுதுணையாக இருக்கின்றார் பிரதி சுகாதார போஷனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரும்> திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பைசால் காசீம் அவர்கள். 

கிழக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பபடுகின்றது. உண்மையில் மக்களின் சுகாதாரத்துறையை மேம்படுத்துவதில் அரசாங்கம் குறிப்பாக இன்றைய அரசு பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. 

அதிலும் சுதேச வைத்தியம் இன்று மக்கள் மத்தியில் நன்கு பிரபல்யம் பெற்று வருவதுடன்> பக்கவியாதிகள் அற்ற இயற்கை வைத்தியத்திய முறையின் அனுகூலங்களை அனைவரும் பெறவேண்டும் என்பதற்கிணங்க இவ்வைத்திய ஆய்வுநிலையம் நிந்தவூரில் திறக்கப்படவிருக்கின்றது.

ஆதிகால மனிதன் இயற்கையோடு கைகோர்த்து வாழ்ந்து வந்திருக்கின்றான். ஆரோக்கியமும் இன்பமும் நிறைந்த அவனது வாழ்க்கையில் குறைகள் என்று ஏதும் இருக்கவில்லை. 

இருந்தால்கூட‚ அதற்கான தீர்வும் இயற்கையிடமிருந்தே அவனுக்குக் கிடைத்திருக்கிறது. இயற்கையை ஆதாரமாகத் தழுவி வாழ்ந்த அக்கால மனிதன்‚ அவனது நோய் நொடிகளுக்கு இயற்கையிடமிருந்தே தீர்வுகளைப் பெற்றுக் கொண்டான். மிகச் சிறந்த மருத்துவமான இயற்கை மருத்துவம் அவ்வாறு தான் உயிர்பெற்று வளர்ந்து வந்துள்ளது. 

மனித உடலில் உருவாகும் நச்சுக்களை வெளியேற்றி‚ உடல் உறுப்புக்களை சுத்தம் செய்து இயற்கை வளங்களின் மூலம் உடலை ஆரோக்கியமாகப் பேணும் மூல மந்திர சாஸ்திரமே இயற்கை மருத்துவமாகும்.

மொழி‚ சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் இன்று உலகில் ஆங்கில மருத்துவம்‚ சித்த மருத்துவம்‚ இயற்கை மருத்துவம் என பல்வேறு மருத்துவ முறைகள் இருக்கின்றன. ஓலைச் சுவடிகளிலும்‚ கல்வெட்டுக்களிலும் பொறிக்கப்பட்டு மகத்தான தன்மைகளைக் கொண்டு கி.மு 4000 ஆண்டு காலத்திலிருந்தே‚ குறிப்பாக இலங்கையிலும்‚ இந்தியாவிலும் பயன்பாட்டில் இருந்து வந்த 'வாழ்க்கையின் விஞ்ஞானம்' (ளுஉநைnஉந ழக டுகைந) ஆயுர்வேதம் ஆகும். 

இத்தகைய ஆயுர்வேத சிகிச்சை முறைகளின் ஊடாக மனிதர்களுக்கு ஏற்படுகின்ற அனைத்துவிதமான நோய்களுக்கும் நிவாரணம் வழங்கும் வகையிலும், இன்று அனைவர் மத்தியிலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள தொற்றா நோய்களின் அறிகுறிகளை மேலும் ஆய்வுசெய்து, சுதேசவைத்தியத்தின் ஊடாக சிகிச்சை பெற்று சுகதேகியாக வாழ்வதற்குரிய நிலைமையினை ஏற்படுத்துவதற்கும் இவ்வாய்வு மையம் சிறந்த பலனைத் தரும் என்கிற அடிப்படையில் இத்திட்டம் இலங்கையில் முதன்முதலாக தென்கிழக்கின் மையமான நிந்தவூரில் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.

இவ் ஆயுள்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் தொற்றாநோய்; பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் டாக்டர் கே.எல். நக்பர்> கிழக்கு மாகாண சுகாதார சுதேசமருத்துவ அமைச்சினதும்> மற்றும் பிரதி சுகாதார போஷனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் சுதேச மருத்துவப் பிரிவுக்கான நிபுணத்துவ ஆலோசகராகவும்> அட்டாளைச்சேனை தளவைத்திய ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகவும்> செயற்பட்டு வரும் டாக்டர் நக்பர்> கணனி விஞ்ஞானத்துறையில் முதுமானிப் பட்டத்தையும்> கொழும்பு பல்கலைக்கழகம்> களனி பல்கலைக்கழகத்தில் நிருவாக முகாமைத்துவம் ஆயுள்வேத வைத்திய நிலையங்கள் தொடர்பான நிருவாக முதுமானிப் பட்டத்தையும் பெற்றுள்ள முதலாவது முஸ்லிம் யூனானி மருத்துவ பட்டதாரியாவார். இவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் வழங்கிய பதில்களையும் பார்ப்போம்.

வினா : தென்கிழக்கின் நிந்தவூரில் ஆயர்வேத ஆய்வுநிலையத்தை ஸ்தாபிப்பதன் நோக்கம் என்ன?

விடை : தேசிய அந்தஸ்தை ஆயுர்வேத வைத்திய துறைக்கு வழங்கவேண்டும் என்கிற அடிப்படையில் 2007 ஆம் ஆண்டு மத்திய அரசின் உதவியுடன் மாகாண சபையின் அதிகாரங்களைப் பயன்படுத்தி> முன்னாள் விஞ்ஞானப் பிரதியமைச்சரும்> தற்போதைய சுகாதார போஷணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சருமான பைசால் காசீம் அவர்கள் அப்போதைய சுதேச மருத்துவ அமைச்சர் திஸ்ஸ கரலியத்த அவர்களின் உதவியுடன் என்னால் முன்னெடுக்கப்பட்ட பொத்துவில்> இறக்காமம்> ஒலுவில்> நிந்தவூர் போன்ற வைத்திய நிலையங்கள் தாபிக்கப்பட்டன. இதற்கு முன்னர் 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி தான் தொண்டர் வைத்தியராக சேவையைப் பெற்று தன்னால் உருவாக்கப்பட்ட அட்டாளைச்சேனை வைத்தியசாலையையும்> கிழக்கு மாகாணத்தின் ஆயுர்வேத சுகாதாரத்துறைக்கு கிடைத்த முதற்வெற்றி என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.

இன்று இவை முழுமையாக செயற்படுவதற்கு, எனது அனுபவத்தைக் கொண்டு எனது கோரிக்கையின்பேரில் பிரதி சுகாதார அமைச்சரும்> சுதேசவைத்திய போஷாக்குத்துறை அமைச்சருமான கௌரவ பைசால் காசீம் அவர்களின் முழுமையான பங்களிப்புடன் இதனை புனரமைத்திருக்கின்றோம். இதற்கு ஆயுர்வேதத் திணைக்களம்> சுகாதார அமைச்சின் பங்களிப்பும் கிடைத்திருக்கின்றது. மாத்திரமன்றி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் அவர்களின் பங்களிப்பும் இதற்குக் கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

மாத்திரமன்றி நாட்டில் தொற்றா நோய்களுக்கான சிகிச்சையினை நாம் பலருக்கு வழங்கியிருக்கின்றோம். இந்நோயின் தாக்கத்தினால் பல இறப்புக்களும் இடம்பெற்றிருக்கின்றன. இதனை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கும்> இது சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும்> புதிய கண்டுபிடிப்புக்களை கண்டறியவும் இவ்வைத்திய ஆய்வு நிலையத்தை ஆரம்பிக்கின்றோம். 

இலங்கையில் ஆயுர்வேத ஆராய்ச்சி தொற்றாநோயைக் கட்டுப்படுத்துவதற்கும்> நிரந்தரமாக கையாள்வதற்குமாக நிந்தவூரை மையப்படுத்தி இலங்கையின் முதற்தர வைத்தியசாலையாக வடிவமைத்திருக்கின்றோம். 

இதனை சரியான முறையில் செயற்படுத்தி மக்களுக்கு இதன் பலக் கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதி சுகாதார போஷனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரான பைசால் காசீம் அவர்கள் முழு மூச்சுடன் செயற்பட்டு வருகின்றார். 

அத்துடன் எனது பலவருட அனுபவம்> சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகராகவும் இருக்கின்ற என்னை இதன் பதில் பணிப்பாளராக நியமித்து இதனை ஒழுங்குமுறையாக மேற்கொள்ளுமாறு பணித்ததன் நிமித்தம் இதற்கு எனது முழுமையான பங்களிப்பினை வழங்கிவருவதுடன்> நாட்டின் ஆயுர்வேத சுகாதாரத்துறையை நவீனத்துவமிக்கதாக மாற்றியமைப்பதற்கான ஒரு சந்தர்ப்பாகவும் இதனைப் நான் பார்க்கின்றேன்.

வினா : ஆயுர்வேத சுகாதாரத்துறையை திறம்பட அபிவிருத்தி செய்வதன் மூலம் மேற்கொள்ளக்கூடிய புதிய திட்டங்கள் எவை?

விடை : இலங்கையில் காணப்படுகின்ற சுதேச மருத்துவம் பாரம்பரிய ஆயுர்வேத யூனானி சித்த ஹோமியோபதி போன்ற வைத்தியப்பிரிவுகள் கடந்த காலங்களில் தனி அமைச்சின்கீழ் செயற்பட்டு வந்தது. இன்று சுகாதார போஷணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு என்கிற அமைச்சின்கீழ் சுகாதார அமைச்சுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது. 

இது இத்துறைக்கு கிடைத்;த பாரிய வெற்றி என்பதுடன்> சுதேச மருத்துவத்துறையானது தேசிய அந்தஸ்துள்ள சுகாதாரத்துறைக்கு சமனான ஒரு துறையாக இவ்வரசு நல்;லாட்சி அரசின் கொள்கையாக பிரகடனப்படுத்தி முன்னெடுப்புக்களை மேற்கொள்வது இத்துறையை சார்ந்த அனைவருக்கம் அத்துடன்> இத்துறையைப் பயன்படுத்துகின்றவர்களுக்கும் கிடைத்திருக்கின்ற ஒரு சந்தர்ப்பமாகும்.

அரசு தொற்றாநோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு பல கோடிரூபாய்களை செலவு செய்து வருகின்றது. குறைந்த செலவில் இந்நோயை எமது வைத்தியத்துறையான ஆயுர்வேதத்தை மேம்படுத்துவதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்தலாம் என்கிற நம்பிக்கை எம்மிடம் உண்டு. ஏனெனில் கடந்த பத்துவருட அனுபவத்தைக் கொண்டு தொற்றாநோய்களைக் எமது வைத்தியமுறை கட்டுப்படுத்தியுள்ளது. இதனை மேலும் வியாபித்து மேம்படுத்துவதன் மூலம் இது சாத்தியமாகும். 

இந்த விடயத்தில் எனது சார்பான நியாயங்களை பிரதி சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்தபோது அமைச்சர் அவர்கள் தனது முழுமையான அர்ப்பணிப்பினை வழங்கியுள்ளார். இதன்வெளிப்பாடாகத்தான் நிந்தவூரில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படுகின்றது. இவ்வாறான ஒரு தொற்றாநோய் ஆராய்ச்சி வைத்தியசாலை இலங்கையில் திறக்கப்படுவது இதுவே முதலாவது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -