இணைப்பு 2:
இந்தோனேஷியாவில் 8.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் எனினும் கரையோர பிரதேச மக்கள் அவதானமாக இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள சுமத்ரா தீவில் இருந்து சுமார் 808 கிலோ மீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
முதலில், 8.2 ரிக்டர் அளவில் பதிவாகி, பின்னர் 8.1 ஆக குறைந்தது,இந்த இரண்டு பதிவினை தொடர்ந்து 7.9 ரிக்டராக குறைந்துள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
