கடந்த பொதுத்தேர்தலின் போது அம்பாறை மாவட்டதிட்க்கு இலங்கையின் தலைப்பகுதியிலிருந்து பறந்து வந்த பறவை ஒன்று தேர்தலின் பின்னர் காணாமல் போகிவிட்டதாக நாபீர் பௌண்டசன் தலைவர் உதுமான்கண்டு நாபீர் குற்றம் சுமத்தினார்.
அண்மையில் மாளிகைக்காடு கமு/அல் -ஹுசைன் வித்தியாலயத்தில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் தனதுரையில் மக்களை கிறுக்கர்களாக நினைத்து செயற்படும் சில அரசியல் வாதிகள் விரைவில் முகவரியிழக்கும் நாள் வரும் என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்;
மக்களின் நினைவுகளையும், உணர்வுகளையும் மதிக்காது தனது பக்கட்டை நிரப்பிக்கொள்ள யாருடைய உயிர் செத்தாலும் பரவாயில்லை தான் நன்றாக வாழ்ந்தால் போதும் என நினைக்கின்ற அரசியல் வாதிகளை மக்கள் ஓரங்கட்ட வேண்டும். நமது அம்பாறை மாவட்ட மக்கள் அந்த தலைமையை மதித்து அவருக்கு சுமார் 35 ஆயிரம் வாக்குகளை அளித்ததுக்கு அவர் செய்த கைமாறு என்ன? என கேள்விஎழுப்பினார் .
அத்துடன் அவருக்கு வக்காளத்துவாங்கி மக்களை ஏமாற்றியவர்களுக்கு பதவிகளை கொடுத்து அவர்களது மனைவி ,மக்களை வாழவைத்துள்ளார்,ஆனால் வாக்களித்த மக்கள் நடு வீதிகளிலும் சமுக தளங்களிலும் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
ஆணையாக்குவோம்,பூனையாக்குவோம் என சுடுதன்நீரில் வடைசுட்ட அவரது கூஜாக்கள் இன்று கொழும்பில் சுகம் அனுபவிக்கிறார்கள் மக்களை சந்திக்கவும் விரும்புகிரார்களில்லையாம் என்பதை நினைக்கின்ற பொது மிக வேதையாக இருக்கிறது.இப்படியானவர்கள் நல்ல காலம் எம்.பிக்கலாகாமல் விட்டது. இப்படியான செயல் கொண்டவர்களை நாங்கள் வீட்டில் ஓய்வெடுக்க அனுப்பிவைத்துவிட்டு நன்றாக படித்த ,சமுக அக்கறை கொண்ட இளம் சமூதாயத்தை பதவிகளில் அமர்த்த இந்த நாபீர் பௌண்டசன் முன்வந்துள்ளது என்றார்.
இந்நிகழ்வில் ஊர்பிரமுகர்கள் ,புத்தி ஜீவிகள் , பொதுமக்கள் என கலந்து கொண்டனர்.
