தகவல் உதவி: அஷ்ரப் ஏ சமத்-
இன்று காலை அதிர்ச்சி கொடுத்த தெகிவளை வீடொன்றில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலதிக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி இவ்விபத்து தெகிவளை கவ்டான வீதியில் உள்ள 40 ஆம் இழக்க வீட்டில் இடம்பெற்றுள்ளது.
வபாத்தானவர்களில் ஒருவரான ஹுசைன் மவ்லானா என அறியப்படும் நபர் சுமார் 65 வயதுடையவர் சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து விற்பவர். இவரின் கடை புறக்கோட்டையில் உள்ளது.
இவரின் மனைவி முர்ஷிதா மவ்லானா மற்றும் 13 வயது மகளுடன் சகோதரியின் மகளுமே ( Mizna Moulana & Husna moulana.) உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை 9 மணியளவில் இவர்களின் சாரதி வீட்டுக்கு வந்து அழைத்த போது ஒருவரும் பதில் கொடுக்காததை தொடர்ந்து முன்பக்கம் உள்ள வீட்டிலுள்ளவர்களை அழைத்து அவர்களின் உதவியுடன் பார்த்த போது நால்வரும் சடலமாக இருப்பது கண்டறியபப்டுள்ளது .
எரிவாயு வெடிப்பினால் ஏற்பட்ட வாயுவை சுவாசித்ததனால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற அதேவேளை சடலங்களில் எந்தவித தீ காயங்களும் காணப்படவில்லை.
பல ஊடகங்களில் உடல் கருகிய நிலையில் சடலங்கள் மீட்பு என வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை எனவும் அது பொய்யான வதந்தி எனவும் நாம் தொடர்பினை ஏட்படுத்தி வினவிய போது எமது செய்தியாளர் அஷ்ரப் ஏ சமத் குறிப்பிட்டார்.
பல ஊடகங்களில் உடல் கருகிய நிலையில் சடலங்கள் மீட்பு என வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை எனவும் அது பொய்யான வதந்தி எனவும் நாம் தொடர்பினை ஏட்படுத்தி வினவிய போது எமது செய்தியாளர் அஷ்ரப் ஏ சமத் குறிப்பிட்டார்.
காலி, வெலிகம பகுதியைச் சேர்ந்த இவர்கள் தெஹிவளையில் வசித்து வந்துள்ளனர்.
மேற்படி உயிரிளந்தவர்கள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிஸாஹிர் மெளலானா அவர்களின் உறவுக்காரர்கள் என்பது குறிப்பிட தக்கது .
போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
