பாறுக் ஷிஹான்-
யாழ் கதீஜா கல்லூரியின் இடிபாட்டுக் கட்டிடத்திலிருக்கும் குடும்பங்களுக்கு வேறு இடத்தில் தற்ககாலிக இருப்பிட வசதியை செய்து கொடுப்பது தொடர்பாகவும், பொம்மைவெளி 1ம் குறுக்குத்தெரு (மைய்யவாடி) காணியில் தற்காலிக குடியிருப்பாளர்களின் இடத்தை மேம்படுத்துவது தொடர்பாகவும், அரசாங்க அதிபரிடம் கடந்த 09.03.2016 அன்று மக்கள் பணிமனைத் தலைவரும் அமைச்சர் ரிசாத் பதியுத்தீனின் யாழ் மாவட்ட மீள் குடியேற்ற பிரதிநிதியுமான மௌலவி பி.ஏ.எஸ் சுப்யான் வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கு இணங்க இன்று 15.03.2016 அரசாங்க அதிபரின் பணிப்பின்படி மீள்குடியேற்றத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் நேரடியாக களத்திற்கு வந்து நிலைமைகளை ஆராய்ந்து சென்றுள்ளனர்.
இந்திய அரசாங்கத்தின் ஒரு கோடியே 60 இலட்சம் ரூபா யாழ் கதீஜா மகளிர் கல்லூரிக்கான கட்டிடத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலைகள் எதிர்வரும் ஏப்ரல் நடுப்பகுதியின் முன்பு ஆரம்பிக்கப்படாவிட்டால் இப்பணம் திருப்பிச் சென்று விடுமாதலால் இதற்கு முன்பு இவ் இடிபாட்டுக் கட்டிடத்திற்குள் இருக்கும் குடும்பங்களுக்கு மாற்று ஏற்பாடு அவசரமாகச செய்யப்படவுள்ளது.


