கடமை நேரத்தில் ஊர் சுற்றும் அரச ஊழியர்கள் -அதிகாரிகளுக்கு கடிதம்


அபு தாஹிர்-
டமை நேரத்தில் அரச ஊழியர்கள் சிலர் காரியாலயத்தில் கையொப்பம் வைத்து விட்டு சொந்த வேலைகளில் ஈடுபடுவதாக ஆதாரங்களுடன் உரிய அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஊழியர்கள் சிலர் கையொப்பம் வைப்பதற்கு மட்டுமே காரியாலயம் செல்வதாகவும், சிலர் சக ஊழியர்களுக்கு தொலைபேசியில் தனது கையொப்பத்தையும் வைக்குமாறும்  கூறிவிட்டு ஒவ்வொரு நாளும் தங்களின் சொந்த வேலைகளில் இருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த வாரம் அக்கரைப்பற்றில் நடந்த ஒரு சம்பவத்தில் அரச கடமை நேரத்தில் துண்டுப்பிரசுரம் பகிர்ந்த நபர் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் அவருக்கெதிராக பொலிசில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் பலர் அரசியல்வாதிகளைக் காரணம் காட்டி முறையான விடுகையில்லாமல் வீதிகளிலும் மைதானங்களிலும் உலாவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டுக்கடிதம் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கும் அனுப்பிவைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்ட அரச ஊழியர்களின் புகைப்படங்களையும் வெளியிடவுள்ளதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -