எம்.வை.அமீர் -
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தூதுக்குழு ஒன்று கடந்த 2016-02-28 ஆம் திகதி சிநேகபூர்வ விஜயமாக மலேசியாவுக்கு சென்றிருந்தது.
இவ்விஜயத்தின் முதல் நிகழ்வாக குழுவினர் அந்நாட்டின் ஆளும் கட்சியான UMNO வின் செயலாளர் நாயகம் அத்னான் பன் தெங்கு மன்சூறை சந்தித்து உரையாடலில் ஈடுபட்டனர். இவர்களுக்கிடையேயான சந்திப்பு உம்போ தலைமை பயிற்சியகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மு.கா சார்பில், தூதுக்குளுவின் தலைவரும், கிழக்குமாகாண சபையின் உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின், இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரிஸ்வி ஜவர்ஷா, பொறியியளாளர் சிப்லி பாரூக் ஆகியோருடன், கட்சியின் ஏனைய தூதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இத் தூதுக்குழுவினர் 05ஆம் திகதிவரை தங்கியிருந்து பல்வேறு குழுக்களையும் சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.




