யூ.எல்.எம். மன்றத்தின் 11ஆவது ஆண்டு விழா கொழும்பில் - அமைச்சர் சம்பிக பிரதம அதிதி

யூ.எல்.எம் பாரூக் மன்றத்தின் பதினோராவது வருடாந்த மகாநாடு எதிர்வரும் 4 ஆம் திகதி மாலை 3மணிக்கு கொழும்பு 07 விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

சபாநாயகர் தேசபந்து கருஜயசூரிய தலைமையில் நடைபெறும் இந்த வைபவத்தில் மாநகர மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக எதிர்க்கட்சித்தலைவர் ஆர். சம்பந்தன் நகரதிட்டமிடல் நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர, சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்துகொள்வார்கள்.

இந்த வைபவத்தின் மூன்று கோரளை, மற்றும் பஹத புலத்கம தெபாலதே அஸ்கிரி பீட பிரதான சங்க நாயக்கர் வன்தல ஸ்ரீ விபுத்திராமதிபதி ஹால்யாலே ஆரியவங்ச தேரர் தேசிய ஐக்கியத்துக்கும் இன சௌஜன்யத்துக்கும் ஆற்றிய சேவைக்காக சபாநாயகர் கரு ஜயசூரிவினால் விசேட விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதாக மன்றத்தின் தலைவரும் முன்னாள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சருமான யு.எல்.எம் பாரூக் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -